பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 உரைநடைக் கோவை வேண்டியதாகின்றது. "செல்வப் புதல்வரே ஈர்ங் கவியா" என்றபடி புலவர்க்குப் புலமைப் புதல்வராகப் பிறக்கும் இயல்பினவாகிய பாட்டுக்களைக் கருக் கொள்ளாது பொறையுயிர்க்க வெண்ணின் எங்ஙன மாம்? தமிழ்த் துறையில் ஒரு சிறிதும் பயிலாத சிலர் தம் பதவி மேம்பாட்டால் ஒரோ வமயம் இன்னோரன்ன அவைக் களங்களில் தலைவராக வீற்றிருக்கும் பேறு பெறுங்கால் அவர் கூறும் உபதேசம் எத்துணைப் பய னுடையதாகுமென்பதை நீங்கள் அறிவீர்கள். அவரை உயர் பதவிக்குக் கொண்டு வந்த மொழிப் பயிற்சியில் அவர் செலவிட்ட காலத்தையும் முயற்சியையுங் கூறு படுத்துக் கால் அல்லது அரைக்காற்கூறு தமிழுக்கு உபயோகப்படுத்தி யிருப்பராயின், அவர் உபதேசங் கொள்ளற்பாலதாகும். அங்ஙனமின்றி, "பண்டிதர் நடை கடினமாதலிற் பயனுடையதன்று" என்றின் னோரன்ன உபதேசங்களைச் செய்வரேல் அவற்றை எவ்வாறு ஏற்றுக்கொள்ளலாம்? சிறந்த நடையில் எழுதுவார் மிகச் சிலரே. அவர் களும் இவர் ஆரவாரத்தில் ஈடுபட்டுத் தம் இயற் கையைக் கைவிடுவராயின் அக்கடை வனப்பை யாண்டுக் காண்பேம்? இவ் வுபதேசகர் கருத்துப்படி எது நல்ல நடையென்று தெளியப் புகின் அது நகை விளைக்கும். பிறமொழிகளிலுள்ள சொற்களை மிகுதி யாகக் கலந்து இலக்கணவரம்பின்றி எழுதப்படுவதே எளிய நடை யென்பது அவர் கருத்து. இந் நிலையைக் கடைப்பிடித்துள்ளாரே இக் காலத்துப் பலராவர். இயல்பிற் பரந்து கிடக்கும் இவ் வெளிய கொள்கைக்கு