பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழும் தமிழ்ப் பணியும் நூலில் ஈடுபட நேர்ந்தது செய்யு ளின்பத்தினாலேயாம். மீண்டும் அவரை அவர் சமய நிலையில் திட்பமுறப் பிணித்து வயமாக்கியதும் செய்யு ளின்பமேயாம். கல்வியே கற்புடைப் பெண்டிர்அப் பெண்டிர்க்குச் செல்வப் புதல்வரே யீர்ங்கவியாச்- சொல்வளம் மல்லல் வெறுக்கையா மாண் அவை மண்ணுறுத்துஞ் செல்வமும் உண்டு சிலர்க்கு" 25 என்றபடி புலமைக்கு மகப்பேறு ஈர்ங்கவியாயின், கவி பாடும் ஆற்றலில்லாதார் புலவ ருலகத்தில் மக்கட் பேறில்லா வாழ்க்கையை உடையவராவ ரல்லரோ! ஆதலின், புலமை வாழ்க்கையிற் சிறப்பெய்த எண் ணுவா ரெல்லாம் செய்யுள்பாடும் வன்மையுடையா ராதல்வேண்டும். அவ்வன்மையைப் பயிற்சி முக பாகப் பெருக்கிக்கொண்டு சிறந்த நூல்கள் செய்யுள் வடிவில் எழுத முயறல்வேண்டும். அதனோடு பழைய சிறந்த நூல்களுள் உரை யெழுதப்படாதவைகட்கெல்லாம் உரை வரைதலையும் மேற்கொள்ளல் வேண்டும். நூலாசிரியரின் அரிய கருத்துக்களை யெல்லாம் உரையாளர் உதவியாலேயே உலகம் உணர்ந்து இன்புறுகின்றது. பேருபகாரி களாகிய உரையாசிரியர்களின் உதவி இல்லையாயின் பண்டை உயர்நூல்களாம் கருவூலங்களில் தொகுத்து வைத்த விலைவரம்பில்லாப் பொருண்மணிக் குவியல் களை யாம் எங்ஙனம் பெறுதல்கூடும்? வடமொழியில் சூத்திரகாரராகிய பாணினியாரினும் உரையாளராகிய பதஞ்சலியார் பெருமை சிறந்து விளங்குதலை அறியா தார் யாவர்? நூலாசிரியர் உள்ளக்கிடக்கையை நுணுகி