பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழும் தமிழ்ப் பணியும் சொல்ல விரும்பின் அவர்சொல் மதிக்கப்படுதல் இல்லா மையும், வடமொழியாளர் செல்வாக்கு இவர்களிடை மிகுதிப்பட் டிருந்தமையுமேயாம். வடமொழியாளர் தம் மொழியைப் பேணுதற் பொருட்டு செல்வரைத் தூண்ட முயல்வது அவர் கடமையே. அதுபற்றித் தமிழரைப் புறக்கணித் தொதுக்கும்படி அவர்கள் உப தேசிக்கவில்லை. நாம் நம் தாயை மறந்திருப்போமாயின் நமக்கு நினைவுறுத்துவார் யாரே ? எம் மரபினர் புதிய முறையில் எவ்வறத்தையும் முதற்கண் தொடங்குதல் அரிது. அறிவாள்ரொருவர் தொடங்குவா ராயின், அவர் முறையைப் பின்பற்றி மற்றையோரும் அந் நற்காரியத்திற் சேறலிற் பெரிதும் விரைவு மேற்கொள்வர். இந் நற்குணம் ஒன்று வருங் காலத்தில் நலமளிக்கும் தகையது. இதற்கு எம்மவருள் ஒருவர் தக்கவாறு வழிகாட்டியுள்ளார். அவர்கள், ஸ்ரீ நடராசர் திருவருட்பாங்கால், கானாடுகாத்தானிலே எம் தனவைசிய மரபிலே, சிறந்த சிவஞானச் செல்வ ராகவும் அருட் கவியாகவும் விளங்கிய பட்டினத்து அடிகளைக் குல முதல்வராகக் கொண்ட செல்வப் பெருங்குடியிலே தோன்றிய திருவாளர் சர் சா. ராம். மு. அண்ணாமலைச் செட்டியாரவர்களே யாவர். இவர் கள் சிதம்பர தலத்தில் ஆங்கிலம் வடமொழிகளுக்கு அமைத்த பெரிய கல்லூரிகளை யொப்பத் தமிழ் மொழிக்கும் ஸ்ரீ மீனாட்சி திருப்பெயரால் ஒரு கல்லூரி யமைத்துப் பாதுகாத்து வருகின்றார்கள். இத் தொடக் கம் ஸ்ரீ நடராசர் திருமுன் நேர்ந்தமையால், இனி நம் தமிழ்நாடு முழுதும் இம் முறை மேற்கொள்ளப்படுதற்கு இது நன்னிமித்தமாகுமென்பதில் ஐயமின்று. இவர்கள் 3 38