பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல் மாபாடியம் போன்ற விரிவுரையே யேற்குந்தகுதி வாய்ந்தது. உயர்ந்த நீதிகளைச் சிறுவர் எளிதிலுணர்ந்து கொள்ளுதற்குப் பெரும் புலவர்கள் பல திறமாக வகுத்து ஆராய்ந்து உரை காண்டற்கும் இஃது இலக் கியமாகத் திகழுமாயின், இதனை உபகரித்த தமிழ்ச் செல்வியின் அறிவின் திட்பம் எத்துணைச் சிறந்ததா கும் என்பதை அறிவுடையார் உணர்வாராக. பண்டை நீதிநூலார் கூடியவரை முயன்று தம் அநுபவத்திற் கண்ட உண்மைகளை நெடுங்கால மாயி எனும் சிதையாம லிருத்தற் பொருட்டுச் சூத்திர வடிவி லும் செய்யுள் வடிவிலும் யாத்துதவினர். அவை உரை நடையில் ஆக்கப்படாமை குறையென்ப ஒரு சாரார். முற்காலத்தில் இவ்வளவு விரிவாக அச்சிடுதற்குரிய கருவிகளில்லை. கற்பவர் நெஞ்சத்தில் உரைநடையினும் செய்யுள் நடை நிலைபெற்று ஞாபகத்துக்கு நன்கு பயன் படும். காலந்தோறும் மக்கள் வழக்க வொழுக்கங் கள் மாறுபடுதல் இயல்பே. அம் மாறுபாட்டிற் கேற்ப நீதி களும் திருத்தப்படுமென்பதுசொல்லாமலே விளங்கும். மகாபாரதத்துக் கண்ட சில அறங்கள் இக் காலத்துக் குப் பொருத்தமாகக் காணப்படா. அதுபற்றிப் பேரறி ஞராகிய வியாச முனிவர் இழித்துரைக்கப்படுவாரல் லர். ஆகவே, எத்தகைய நீதிகளையும் காலம் நோசகிக் கொள்ளுதலும் தள்ளுதலுஞ் செய்தல் வேண்டும். 'பழையன கழிதலும் புதியன புகுதலும்" என்பதைக் கடைப் பிடித்து மனம்போனபடி செய்யத் துணிதல் கன்றனறு. இங்ஙனம் வடமொழி தென்மொழிகளிற் சிறந்த நீதி நூல்களை ஆக்கிய பெரியாருடைய இயல்பு களை இங்கே கூறியன கொண்டு தெளிந்துகொள்க.