பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூத்துப் பார்க்கப் போனவிடத்தில், பேய் பிடித்தது போல. கூப்பிடப் போனதாதி, மாப்பிள்ளையைக் கைக்கொண்டாள், கூரியனாகிலும், வீரியம் பேசேன். கூரைக்காய் வயித்தியம், குணத்துக்கேற்குமா? கூறையேறிக் கோழிபிடிக்கமாட்டாத குருக்கள், வானங்கீறி வைகுண்டங் காட்டுவாரா? கூலிக்கறுத்தாலும், குறுணிக்கறுக்கலாம். வீணுக்கறத்து வெளியிலே நிற்கிறேன். கூலிக்காரன் பெண்டாட்டி பிள்ளைபெறப் போகிறாளா? குப்பை யிலே ஆமணக்கு முளைக்கப்போகிறதா? கூலிக்குக் கழுவிருப்பார்களா? கூலிக்குக் குத்துகிறவளை, கேளிக்கையாடச் சொன்னாற்போல. கூலிக்கு நாத்து நடவந்து, எல்லைக்கு வழக்கே? கூலிக்குப், பாவிகுறுக்கே. கூலி குறைத்தாயோ? குறைமரக்கா விட்டாயோ? கூலிப்படை. வெட்டுமா? கூவென்றவன் பேரில், கொல்லச்சினம். கூழானாலுங் குளித்துக் குடி, கந்தையானாலுங் கசக்கியுடு. கூழிலே விழுந்த ஈக். குழம்புகிறது போல, கூழுக்கு மாங்காய்த் தோற்குமா. கூழுக்கும் ஆசை, மீசைக்குமாசையா? கூனனைக்கொண்டு குழப்படி மாமி, காணிக்குப் பிள்ளை பெற. கெ கெஞ்சுமணியம், பண்ணுகிறது. கெடுத்தவருக்கும், நீ கேடு நினையாதே . கெடுப்பாரைத் தெய்வம் கெடுக்கும். கெடுமதி, கண்ணுக்குத் தோன்முது. கெடுவது செய்தால், படுவது கருமம். கெடுவான், கேடு நினைப்பான். கெட்ட குடி கெட்டது. பூராவாய்க் குடியப்பா? 87