பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஊன்றுகோல்



கதிரேசர் எனும்பெயரைச் சுருக்க மாகக்
கதிஎன்று கூறுவது வழக்க மாகும்
எதிரேதும் இல்லாத சொல்லின் செல்வர்
எழிலொழுகுந் தனிநடையர் ரா. பி. சேது
மதிசேரும் பிள்ளையவர் பண்டி தர்க்கு
மனமுவந்தே பாராட்டு வழங்கும் போது
‘கதிரேச மாமணியார் தமிழ்மொ ழிக்குக்
கதியாவார்’ எனமகிழ நயமு ரைத்தார்.
12
“கனிமொழியால் நாவசைத்துப் பேசுங் காலை
காப்பியத்துள் இரண்டறவே கலந்து நிற்பார் ;
மனமகிழும் காப்பியமே அவரா யிற்று
மணிமொழியார் காப்பியத்தின் வடிவ மானார்;
தனியுயர்வுக் காப்பியத்தின் அருவித் தோற்றம்
தனிநடையில் சொற்பொழியும் இவர்தம் தோற்றம்”
என மொழிந்தார் திரு. வி. க. முருக னுக்கு
முருகுசெயும் இயல்புடையார் மேலுஞ் சொன்னார்
13
“வண்டிசைக்கும் யாழோசை, குயிலின் பாட்டு,
வண்ணமயில் எழிலாட்டம், அருவி வீழ்ந்து
கொண்டெழுப்பும் நன்முழவு, பிறவுங் கூடிக்
கொழிக்கின்ற இன்பத்தைத் தமிழில் தோய்ந்த
பண்டிதரின் மணிமொழியில், நாவு திர்க்கும்
பாநயத்திற் பெற்றுணர லாகு” மென்று
பண்டையநற் றமிழ்மொழியின் அழகு ணர்ச்சிப்
பாட்டுக்குப் பொருளான பெரியார் [1] சொன்னார்.
14


  1. பெரியார் - திரு. வி. க.