பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்காலத் தமிழ்க்கவிதை & 46 கம்பன் காலம் முதல் சுதந்திரத்துக்கு முந்திய காலம் வரை அகலிகை குறித்துக் கவிஞர்கள் பாடியுள்ள விதம் பற்றி டாக்டர் கைலாசபதி தமது 'அடியும் முடியும் நூலில் விவரித்துள்ளார். . - சுதந்திரத்திற்குப் பின் வந்த கவிஞர்களும் அகலிகையை விடவில்லை. எத்தனையோ கற்களை என் காலிடறிற்று ஒன்றிலேனும் அகலிகை அகப்படவில்லை என் பெயரும் இராமன்தான் என்றும் இந்திரன் வந்தான் கல்வானேன் இராமன் வந்தான் பெண்ணானேன் இன்றந்த்ச் சினமுனி வந்து இராமன் உன்னைத் தொட்டானென்று மறுபடி சபித்தால்...... 2 - என்றும் அகல்யை பற்றி சிலர் உதிர்த்துள்ள துணுக்கு வரிகளிலேயே சிலர் சொக்கி நிற்பதைப் பார்க்கிறோம். எனினும் அண்மையில் வெளிவந்துள்ள கவிஞர் சிற்பியின் 'அகலிகை இன்னும் காத்திருக்கிறாள்' என்னும் கவிதை 'தான் ஆக்கக் கற்பனைக்கு அடையாளமாயுள்ளது. 'அகலிகை மாத்திரமல்ல; பெண்குலமே ஆடவர்களின் கல்நெஞ்சத்திலிருந்து இன்னும் விடுதலை பெறவில்லை என்ற கருத்து கவிதையின் இறுதி வரியில் தொனிக்கிறது. இல்லை... அந்தக் காலடிகள் இராமனல்ல வெறுந் தவிப்பு......