பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்காலத் தமிழ்க்கவிதை * 90 மாணவர்கள் கல்லூரியை விட்டு வெளிவந்ததும் விழுங்கக் காத்திருப்பது வேலையில்லாத் திண்டாட்டம் என்னும் பூதம். அதைப்பற்றி எத்தனை பேர் எத்தனை விதமாய் புதுக்கவிதைகள் புனைந்து ஆட்சியாளர் கவனத்தை ஈர்க்க முயல்கின்றனர். வரதட்சணைக் கொடுமை பற்றிக் கல்லூரி மாணவர்கள் எழுதியுள்ள புதுக்கவிதைகள் அவர்களுடைய உள்ளக் குமுறலை அப்படியே கொட்டின. வெண்மணியைப் பற்றி எத்தனை வேதனைக் கவிதைகள். இவற்றுக்கு ஏது வரலாற்று முக்கியத்துவம்? - என்பீர்கள். இன்றைய செய்தி நாளைய வரலாறு என்றாகும்போது இதுபற்றிய புதுக்கவிதைகள் இலக்கியத் தகுதி பெறும் என்பதில் ஐயமில்லை. பாடாண் திணையைப் பாடிக் கொண்டிருப்பது போய் பாட்டாளிகளைப் பாட உதவுவது புதுக்கவிதை என்றும் சமுதாயத்தின் நோய்களைக் கண்டு அருவருப்படை வதுடன் நில்லாது, கத்தி கொண்டு அறுவை சிகிச்சை செய்வது புதுக்கவிதை என்றும் மாணவர்கள் இளைஞர்கள் நம்புகிறார்கள். எனவேதான் நாட்டு நடப்பை நயம்பட விமர்சிக்கும் கவிதைகளை அவர்கள் விரும்புகிறார்கள். சில நேரங்களில் வீட்டில் குடியிருப்பவர் (அரசு ஊழியராக இருந்தால்) வேறு ஊருக்கு மாறிப் போகும்போது வீட்டுக்காரரிடமும் சாவியைக் கொடுத்து விட்டுப் போவதுண்டு; வீட்டுச் சொந்தக்காரருக்குத் தெரியாம லேயே சாவி கை மாறுவதுண்டு. நாட்டின் நிலைமை யிலும் இப்படித்தான் என்கிறார் அப்துல் ரகுமான் நேயர் விருப்பத்தில்: எங்கள் விலங்குகள் கழற்றப்படவில்லை