பக்கம்:எனது பூங்கா.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்கள் விரும்புவது எது? ஆதலால் தமக்கு உற்ற துணையாகப் பல மெய் வீரர் களேச் சேர்த்துக் கொண்டார். அவர்களில் பிரபுக்களாய் இல்லாதவரைப் பிரபுக்களாக, ஆக்கினர். அவர்கள் அனை வரும் ஏழைகளின் நலத்தை நாடுவதும், பெண்களின் கற் பைக் காப்பதுமே தங்கள் வாழ்வின் லட்சியமாக மதித்து வந்தனர். புகழே சுவர்க்க போகம் இகழே நரக அனுப வம் என்பது அவர்கள் திடமானகம்பிக்கை இந்த உயர்ந்த லட்சியத்தைத் தேடுவதில் அவர்கள் தங்கள் உடல், பொருள், ஆவி மூன்றையும் தியாகம் செய்யத் தயங்காத வர். ஆர்தர் மன்னரிடம் அளவிலா பக்தியுடையவர். இவர்களுடைய உதவியால், இவர்களுடைய வீர தீரச் செயலால் ஆர்தர் அரசர் நாளுக்கு நாள் அதிகமாக நாட் டில் காணப்பட்ட கொடியவர்களே அகற்றி வந்தார். மக் கள் அனைவரும், ஆர்தரால் ஆகாதது ஒன்றில்லை. அவர் திேக்கு உறைவிடம். கருணைக் கடல். நமக்கு ஒரு களை கண் என்று போற்றிப் புகழ்ந்து வந்தனர். அவருடைய புகழ்க் கதிர் ஆங்கில நாட்டில் மட்டுமின்றி, ஐரோப்பாக் கண்டம் முழுவதும் பரவி, அரசர்க்குரிய மெய்ப் புகழின் லட்சணம் இது என்று விளக்கி வந்தது. அங்ங்னம் நடைபெற்ற காலத்தில், ஒரு நாள், அரச சபையில் அரசர் பெருமானும், அவருடைய பெருமாட்டி யும், பிரபுக்களும், பிரபுக்கள் மனைவியாரும் ஆனந்தமாய் ஆடல் பாடல்களில் ஆழ்ந்திருந்தனர். அப்பொழுது திடீ ரென்று ஒரு கூக்குரல் - காதைப் பிளக்கும் அழுகைத் தொனி - கேட்டது. "ஐயோ முறையே ? அநீதியை ஒழிக்க அரசர் இல்லையோ? என் கணவரை மீட்டிக் —116–

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/118&oldid=759310" இலிருந்து மீள்விக்கப்பட்டது