பக்கம்:எனது பூங்கா.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



எனது பூங்கா

 நான் வெளியே போகும் வழியில் எந்த வீடுகளில் மரங்கள் கிற்கின்றனவோ அவை எல்லாம் எனக்குச் சொந்தமல்லவோ? ஜெமினி மூலையில் கிராமபோன் கம் பெனியார் தோட்டத்தில் நிற்கும் பூ மரமும் யாருக்குச் சொந்தம்? நான் அதைப் பார்த்துச் சொக்கி நிற்கும்வரை அது எனக்கேதான் சொந்தம். நான் வேலைபார்க்கும் பல் கலைக் கழகத்தின் தோட்டத்தில் பூ மரம் ஒன்று அனாதை யாக நின்றுகொண்டிருந்தது. அதை இன்று நான் என் னுடையதாக ஆக்கிக்கொண்டேன். கடற்கரை வீதியி லுள்ள மராமத்து இலாகாக் காரியாலயத்தின் வாசலில் காணப்பெறும் மலர்ச்செடிகள் காரியாலயத்திற்கு உரிய னவா அல்லது எனக்கு உரியனவா?
 மலர் மரங்கள் பார்க்குகளில் நிற்கலாம். அப்பொழுது அவை பார்க்குக்கு உரிய நகரசபையார்க்குச் சொந்தம். மலர் மரங்கள் வீட்டுத் தோட்டங்களில் நிற்கலாம், அப் பொழுது அவை அந்த வீட்டார்க்குச் சொந்தம். மரங்கள் தான் அவர்களுக்குச் சொந்தமேயன்றி அவைகளில் இலங் கும் அழகும் அற்புதமும் யார் யார் அவைகளைப் பார்த்து ஆனந்திக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் சொந்தம். மரங் களின் உடல் வீட்டார்க்கு உரியது. ஆனால், மரங்களின் உள்ளமோ அவற்றுடன் பேசுவார்க்கு உரியது. யார் அதைப்பார்த்து நிற்கிறார்களோ அவர்களை நோக்கியே அவை அகமகிழ்ந்து நகைசெய்கின்றன. அவற்றின் உள்ள மும் பார்ப்போர் உள்ளமும் ஒன்றுபடுகின்றன. அந்தக் காரணத்தால் ஆன்மவெள்ளம் பாய்ந்து அழியாத ஆனந் தத்தை அளிக்கின்றது. ஆகவே, என்னுடைய பூங்காக்கள் எனக்குமட்டும் உரியனவல்ல. என்னைப்போல் அவற்றைத் துய்க்க அறிந்தோர் அனைவர்க்கும் உரியவையேயாகும்.

—13—

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/12&oldid=1298951" இலிருந்து மீள்விக்கப்பட்டது