பக்கம்:எனது பூங்கா.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



எனது கார்

கார்களைப்போல மனிதனால் உண்டாக்கப்பட்டதன்று. தெய்வீக சக்தியால் சிருஷ்டிக்கப்பட்டதாகும். அதைப் பற்றி ஆராய்ந்த அறிஞர் அது நிர்மாணிக்கப்பட்ட தொழிற்சாலை சூரிய மண்டலத்தின் அருகில் இருந்ததாகக் கூறுகின்றனர். இதில் அறிஞர்க்குள் அபிப்பிராயபேதம் இல்லை. ஆனால் அந்தத் தொழிற்சாலையில் அது செய்யப் பட்ட முறையைக் குறித்து ஏகமனதான அபிப்பிராயம் இல்லை.

 இந்த அறிஞர் போற்றும் அற்புதக் காரைப்போல் அவனியில் வேறு உண்டா? அகிலலோகங்களிலும் அலைந்து தேடினாலும் இதுபோன்ற வேறு காரைக் காண முடியவே முடியாது. இப்படிப்பட்ட கார் இது ஒன்றுதான் உண் டாக்கப்பட்டது. இதை உண்டாக்கி எத்தனையோ லட்சம் வருடங்கள் கடந்துவிட்டன. ஆனால் கார்மட்டும் இப் பொழுதும் புத்தம் புதிதாய் இருக்கின்றது. இடையில் அதன் உறுப்புக்களைப் பிரித்துப் பழுதுபார்த்து மீண்டும் ஒன்றுசேர்க்கவில்லை. அதை ஆக்கிய காலத்திலேயே பழுது பார்த்தல் அனாவசியம் என்று நிச்சயிக்கப்பட்டுவிட்டது.
 பழமையும் புதுமையும் ஆகிய இந்தக் கார் நான் நேற்றோ முன்தினமோ வாங்கியதன்று. நான் பிறந்த அன்றே என்னிடம் இருக்கிறது. பரம்பரையாய் வந்தது என்று என் பெற்றோர் கூறக்கேட்டிருக்கிறேன். அதனால் என் சந்ததியார்களும் இதை அனுபவிப்பர். இதை நான் விற்கமுடியாது. என் கடன்காரர் இதை ஜப்தி செய்ய இயலாது, அரசாங்கத்தாரும் அணுகார்.
 எனது காரின் பரப்பு எவ்வளவு தெரியுமா? இங்கி லாந்து முதலான மேனாடுகளில், உட்கார்ந்து பேசிக்கொண்

—16—

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/15&oldid=1298981" இலிருந்து மீள்விக்கப்பட்டது