பக்கம்:எனது பூங்கா.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



எனது தோழன்

 *அது மட்டுமா ? சாதாரணமாக நண்பர்கள் வேறு பெயர் உடையவர்கள். காதலரில் கணவனும் மனைவியும் கூட ஒரே பெயர் வகிப்பதில்லை. பெயரைக் கேட்டவுட னேயே, இவர் கணவர், இவர் மனைவி என்று கூறிவிடலாம். ஆனால் எங்கள் விஷயத்தில் ஒரு நாளும் அவ்விதம் சொல்லி விட முடியாது. எங்கள் இருவர்க்கும் ஒரே ஒரு நாமங்தான். என் தோழன் பெயரே எனக்கும் என்று கூறலாம்.
 என் தோழனை விட்டு நான் தனியாகத் தோன்றுவ தில்லை. இலைமறை காய் போல் என் தோழனிடம் நான் முழுதும் மறைந்துள்ளேன். பிறர் என் தோழன் இருப்ப தைக்கொண்டே நானும் இருப்பதாக உணர்கின்றனர். என் தோழனுள்ள இடத்தில் நானும் இருக்கிறேன். ஆனால், அதுபோல் நானுள்ள இடத்தில் அவன் இருக்கி றான் என்று கூற முடியாது. அது மட்டுமன்று. நானுள்ள இடம் என்றுகூடச் சொல்வதற்கில்லை. நான் ஒரு நாளும் தனித்திருப்பதில்லை. என் தோழனே எனக்கு ஆதாரம்.
 நாங்கள் இருவரும் 'இருவர்' அல்லர், 'ஒருவரே' என்று கூறுவது உபசார மொழி அல்ல. முற்றிலும், முக்காலும் உண்மையாகும். சாதாரணமாக நண்பர்களில் ஒருவர் சுக துக்கங்கள் மற்றவர் சுகதுக்கங்கள் என்று சொல்லிக் கொள்வதுண்டு. காற்று வீசுவதைக் காட்டும் கருவி போல், நண்பன் வாடினால் நானும் வாடுவேன்; நண்பன் மலர்ந் தால் நானும் மலர்வேன் என்று சொல்லிக்கொள்ளலாம். ஆனால், அப்படி ஒத்து வாழும் நண்பர்களைக் கண்டுவிட்ட தாக யாரேனும் உரைக்க முடியுமோ ?
 'உண்மையான காதலர், ஒருவருடைய உரோமம் ஒன் றிற்குத் தீங்கு உண்டானாலும், உடனே தமக்கும் உண்

—23–

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/22&oldid=1299075" இலிருந்து மீள்விக்கப்பட்டது