பக்கம்:எனது பூங்கா.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



எனது தோழன்

யவை மூலம் என் தோழனுக்கு நன்மையும் தீமையும் தந்து விடுவேன். நாங்கள் இருவரும் அவ்வளவு நெருக்கமான ஐக்கியமுடையவர்கள் அல்லவா? வாலி சீதையை ராம ணுடைய ஆவி என்று கூறினான். அதுபோல் சீதை ராம னைத் தன் பிராணனாகச் சொல்வாள். ஆனால் நானும் என் தோழனும் அவ்விதம் சொல்லமுடியுமா? எங்களுக்கு ஒர் உடல்தான். அதுபோல் எங்கள் இருவரில் யார் யாருக்கு உயிர்? நீங்களே யோசித்துப் பாருங்கள் !

 'தன்னைத்தானே குணப்படுத்திக்கொள்ளுதல் என் னும் சிகிச்சை முறையைக் கண்டு வெளியிட்ட மான்ஷியர் க்யூ என்னும் பிரெஞ்சுப் பெரியார் எங்கள் இருவர்க்கு முள்ள இணைபிரியா நட்பை நன்கு உணர்ந்திருந்தார் என்று தோன்றுகிறது. அதனால்தான் அவர், 'உன் தோழன் சுகமா யிருந்தால் நீ சந்தோஷமாயிருப்பாய் என்பது மட்டுமன்று; நீ சந்தோஷமாயிருந்தால் உன் தோழனும் சுகமாய் இருப் பான் என்பதும் உண்மையாகும்' என்று கூறுகிறார்.
 என் தோழன் சுகவீனமுற்றால் நான் அவனைக் குணப் படுத்தச் செய்யவேண்டியது என்ன ? அவன் மருந்துண்ண லாம். ஆனால் அது மட்டும் போதாது. நானும் உதவி செய்தல் அவசியம். நான் கவலை விட்டு, சோர்வு நீத்து, பயம் ஒழித்து, சந்தோஷமாய் இருக்கவேண்டும். என் ஆனந்தம் அவன் ஆரோக்கிய சாதனம்.
 இப்பொழுது நவீன வைத்திய ஆராய்ச்சியாளரும், எங்கள் ஐக்கியத்தை விளக்க ஆரம்பித்துவிட்டார்கள். என் தோழனிடம் 'கிளான்ட்' என்று ஆங்கிலத்தில் அழைக்கப் படும் சில சிறு உறுப்புக்கள் உளவாம். அவைகள் ஆரோக் கியமாயிருந்தால் நான் அறிவுடையவனாய் அறவழியில் நிற்ப

—28—

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/27&oldid=1299115" இலிருந்து மீள்விக்கப்பட்டது