பக்கம்:எனது பூங்கா.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனித தரிசனம் இவர் மனிதனைத்தேடிப் பட்டப்பகலில் விளக்கேற்றிக் கொண்டு போனதைப் பார்த்தால் மனிதனேக் காண்பது எளிதான காரியமன்று என்றும் அவன் அத்துணை அருமை யான பொருள் என்றும் தோன்றுகிறது. அப்படி மனிதன் எளிதில் தரிசனம் தராத அளவு அவ்வளவு அருமையான பொருளாயிருந்தது அந்தக் காலத்தில் மட்டுந்தான? அது இந்தக் காலத்துக்கும் பொருந்துமா? உலகத்தில் இரண்டு கோடி மக்கள் இருந்த அக்காலத்தில் அருமையா யிருந்தது, இருநூ றுகோடிமக்கள் உள்ள இந்தக்காலத்திலும் அருமை தான் என்று அறிஞர்கள் பலர் கூறுகின்றனர். ஆல்ை, அறிஞர்கள் மனிதனைக் காண்பது அருமையென்று கூறு கிருர்களேயன்றி முடியாத காரியம் என்று கூறவில்லை, மனிதன் அந்தக் காலத்திலும் இருந்தான், இந்தக் காலத் திலும் இருக்கிருன். தயோஜெனிஸ் என்ற ஞானி யவன தேசத்தில் வாழ்ந்த அதே காலத்தில், ' இளம் பெருவழுதி ' என்ற பெய ருடைய பாண்டிய மன்னர் ஒருவர் தமிழ் நாட்டில் இருங் தார். அவரிடம் அவருடைய நண்பர்கள் " இந்த உலகம்அதாவது மனித இனம்-அழியாமல் நிலத்திருப்பதன் கார ணம் என்ன ” என்று ஒரு நாள் கேட்டனர். அதற்கு அவ் வரசர் பெருமான் உண்டால் அம்ம இவ்வுலகம் : இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும் இனிதெனத் தமியர் உண்டலும் இலரே முனிவிலர்: துஞ்சலும் இலர் பிறர் அஞ்சுவது அஞ்சிப் புகழ் எனின் உயிரும் கொடுக்குவர் ; பழியெனில் —44–

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/44&oldid=759373" இலிருந்து மீள்விக்கப்பட்டது