பக்கம்:எனது பூங்கா.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. பாரத தேவியின் பாத தரிசனம் ஆண்டவன் அடியார்கள் அல்லும் பகலும் அனவரத மும் ஆவலுடன் தேடி அலைவது பரமாத்மாவின் பாதார விந்தங்களைக் கண்டு களிப்பதற்கே. முடியைக் காண ஒரு பொழுதும் முயல்வதில்லை. பக்தகோடிகளுக்குப் பாத தரிசனமே, அக்தமில்லாத, இன்பமான, அழிவில் வீடு அளிக்கும் என்பது பெரியோர் துணிபு. மக்கள் மனக் கவலை மாற்றும் மார்க்கம் தனக்குவமை இல்லாதான் தாள் சேர்தல் ஒன்றே என்று தெய்வப் புலமைத் திருவள்ளுவ தேவர் உறுதி கூறுகிரு.ர். அப்படியானுல் துன்ப நிவாரணம் அருளும் துணையடி கள் காண்பது எங்கே இறைவன் இணையடிகள் இருக்கும் இடம் எது? வேத சாஸ்திரங்கள், தர்ம நூல்கள், புராண இதிகாசங்கள் பரமன் பதமலர்களின் மனங் கமழும் இடத்தைப்பற்றிப் பல பல வர்ணனைகள் கூறுகின் றன. தேடிக் கண்டுகொண்டேன்' என்று சந்தோஷத் தோடும் தைரியத்தோடும் அப்பர் ஸ்வாமிகள் பாடுகிரு.ர். ஆல்ை, எங்கே கண்டுகொண்டதாகக் கூறுகிருரோ அங்கே காண்பது அறிஞர்க்கு மட்டுமே இயலும். —52–

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/52&oldid=759382" இலிருந்து மீள்விக்கப்பட்டது