பக்கம்:எனது பூங்கா.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. சுதந்திரத்திற்குச் சுருக்க வழி சுமார் இருநூற்றைம்பது வருஷங்களுக்கு முன்னர் இங்கிலாந்து தேசத்தில் இரண்டாவது சார்லஸ் என்பவர் அரசாண்டுகொண்டிருந்தார். அவர் ஜனங்களுக்கு நன்மை செய்யும் செங்கோல் மன்னராய் இருக்கவில்லை. குடிகளின் பணத்தை வீணான விஷயங்களில் ஏராளமாக விரயம் செய்வதையே வழக்கமாக வைத்துக் கொண்டிருந்தார். அதல்ை கேச மக்களுக்கு அவரிடத்தில் வெறுப்பு அதிகம். ஆயினும் அவருடைய தவருன நடைமுறைகளைப் பகிரங்க மாகக் கண்டிக்க யாரும் துணியவில்லை. ஆனல் அந்தச் சமயத்தில் ஆன்ட்ரூ மார்வெல் என்னும் ஒரு கவிஞர் பெருமான் இருந்தார், அவர் பாடுவதில் சமர்த் தர். பார்லிமெண்டு அங்கத்தினராகவும் இருந்தார். ஆனல் அவர் அதிகமாகப் பேசுவதில்லை. அவருக்குப் பேசுவது தான் சிரமம் : எழுதுவது சிரமமே இல்லை. அவர் யாரைக் குறித்தானுலும்சரி, எந்த விஷயத்தைப்பற்றி யானுலும் சரி, உள்ளத்தில் தைக்கும்படியான விதத்தில் கேலிசெய்து எழுதுவதில் வல்லவர். அவர் ஒருவர்தான் அரசரின் அங்தச் செயல்களேக் கண்டித்து எழுத ஆரம்பித்தார். –76–

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/76&oldid=759408" இலிருந்து மீள்விக்கப்பட்டது