பக்கம்:எனது பூங்கா.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. தங்குவது எங்கே? மக்கள் வேண்டுவது இன்பம். ஆல்ை உலகமோ துன்பத்தையே தந்து நிற்பதாய்த் தோன்றுகிறது. ஆழ்ந்து மூழ்கித் தவிக்கும் துன்ப சாகரத்தினின்று மக்களைக் கரை யேற்றி ஆனந்த வாழ்வு அளிப்பதற்காக அவதரித்துள்ள பெரியோர் பலர். அல் வழி நீங்கி அற நெறி நின்று அன்பு செய்வதே அவர்கள் கூறும் ஆனந்த மார்க்கம். அவர்களில் ஒவ்வொருவரும் இந்தத் தனிப் பெரும் உண்மையை அறிவ தற்கு நியாயங்களையும், அதை நம்புவதற்கு நிரூபணங்கள் அதை அனுஷ்டிப்பதற்கு விதிகள் முதலியன குறித்து வேறு வேறு விதமாக வியாக்யானங்களையும் கூறியுள்ளார். அந்த வியாக்யானங்களே சமயங்கள் என்று கூறப் பெறும் உலக கன்மைக்காக இவ்வுண்மைகளை எடுத்துக் காட்டி இதோபதேசம் செய்து மக்களை ஈடேற்ற வந்த உலக ரட்ச கர்களில் இயேசு கிறிஸ்து ஒருவர். அவர் சற்றேறக்குறைய இரண்டாயிரம் வருஷங் கட்கு முன் அரேபியாவிலுள்ள பாலஸ்தீனத்தில் வாழ்க் திருந்தார். அவர் ஸ்தாபித்த மதத்தைப் பின் பற்றும் அடியார்கள் கோடானு கோடிப் பேர் உலக முழுவதிலும் உளர். உலகில் தற்சமயம் காணப்பெறும் ஐம்பெரும் சம –8–

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/81&oldid=759414" இலிருந்து மீள்விக்கப்பட்டது