பக்கம்:எனது பூங்கா.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எவன் அமரன் ? திருடன் என்று கூறமாட்டார்கள். அவ்வளவு கம்பீர மான தோற்றம் உடையவன யிருந்தான். ஸர். தாமஸ் லூஸி அவனிடம் "யாரடா நீ? உன் பெயர் என்ன ?" என்று கேட்டார். அவன் தன்னுடைய பெயரைச் சொன்னன். அதன் மேல், ஜமீந்தார் 'அடா! நீ மானைத் திருடிய தாகக் கூறுகிருர்கள். அதற்கு என்ன சொல்லுகிருய் ? அடா யார் யார் உன்னுடன் சேர்ந்தவர்கள்? அனைவர்க் கும் சரியான தண்டனை தருகிறேன், அடா! என்ன சும்மா நிற்கிருய்? ஆகட்டும், இந்தப் பயலுக்கு முப்பது அடி திட்டுங்கள் " என்று கூறினர். அப்பொழுது அந்தக் கைதி இந்த விதமான தண்ட னேயை எதிர் பார்க்கவில்லை. அவன் அப்படியே ஸ்தம்பித் துப் போனன். ஆயினும் அடுத்த கிமிஷத்தில் "ஆகா! இந்தத் தண்டனையா? இது வேண்டாம், என்னைச் சிறை யில் போடுங்கள். அல்லது எனக்கு அபராதம் விதியுங்கள் எதை வேண்டுமானலும் ஏற்றுக் கொள்கிறேன், இந்த அடித் தண்டனை மட்டும் வேண்டாம்' என்று கூறினன். ஆனல் லூ ஸி யி ன் மனம் இளகவில்லை. அவனே முக்காலியில் கட்டி அ. க்கவே செய்தார்கள். அதன்பின் அவன் தன்னுடைய வீட்டுக்குப் போனதும், அந்த அவமா னத்தைக் குறித்து வெகு கேரமாகச் சிக்தித்தான். அவருக்கு என்ன அவமானம் ஏற்படுத்தலாம் என்று யோசித்தான் . அவரோ ஜமீந்தார், அவருக்கு என்ன செய்ய முடியும்? –95–

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/97&oldid=759431" இலிருந்து மீள்விக்கப்பட்டது