பக்கம்:எனது பூங்கா.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எவன் அமரன் ? செய்து முடித்தான். அவைகளைத் தன்னுடைய தோழர் களிடம் காட்டினன். அவர்கள் எல்லோரும் அவற்றைக் கேட்டுச் சிரித்தார்கள். அவ்வளவு தான்; அதன்பின் எங்கே பார்த்தாலும் அந்தப் பாடல்கள் பரவி விட்டன. o ஆலுைம் அந்த இளைஞன் அத்தோடு விடவில்லை, அவரைப் பற்றி ஊரார் சிரிப்பது அவருக்குத் தெரியுமோ, என்னவோ? அந்தப் பாடல்கள் அவளிடம் போய்ச் சேர்ந்த னவோ, என்னவோ ஆதலால் இரவில் வெகு ஜாக்கிரதை யாகப் போய் அவருடைய மாளிகையின் வெளிக் கதவில் அந்தப் பாடல்களின் நகல் ஒன்றை ஒட்டிவைத்தான். மறுகாட் காலையில் அ ங் த ஜமீந்தார் தம்முடைய மனேவியுடனும் மக்களுடனும் சந்தோஷமாகப் பலகாரம் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுது வேலைக்காரன் ஒருவன் அந்தக் கடுதாசியைக் கொண்டுவந்து கொடுத்தான். 'ஐயனே! இந்தக் க டு தா சி வெளிக்கதவில் ஒட்டி யிருந்தது. எங்களுக்குப் படிக்கத் தெரியாதாகையால் ஏதேனும் முக்கியமான விஷயமாய் இருக்குமோ? எஜமான் பார்வைக்குக்கொண்டு போவோம் என்று எண்ணி எடுத்து வங்தேன்' என்று கூறி வணங்கினன். அவர் அந்தக் கடுதாசியைக் கையில் வாங்கி, அதி லுள்ள பா ட ல் க ளே ப் படிக்க ஆரம்பித்தார். அவை அவருக்கு அதிகச் சுவையுடையனவாகத் தோன்றின. அவர் தம்மை அறியாமலே சிரித்துக்கொண்டார். அதைக் கண்ட அவருடைய மனைவி, 'அப்படி என்ன வேடிக்கை அந்தக்கடுதாசியில்? அவ்வளவு அதிகமாகச் சிரிக்கிறீர்களே” என்று கேட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/99&oldid=759433" இலிருந்து மீள்விக்கப்பட்டது