பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

என்ன? ஏன்? எப்படி?

தொழில்கள் செய்பவர்கள். கலப்படத்தொழில்கள் எல்லாம் பேராசை கொண்டவர்களால் செய்யப்

படுபவையே!

என்னால் சுறுசுறுப்பாக வேலை செய்ய முடியவில்லையே சுறுசுறுப்பு ஏற்பட என்ன செய்ய வேண்டும். சோம்பலை உதறித் தள்ளவேண்டும் பச்சைக் காய்கறி களைச் சாப்பிட்ட்ால் சோம்பல் ஏற்படாது. நீங்கள் செய்ய வேண்டிய எந்தச் செயலையும் அன்றன்றே அவ்வப்பொழுதே செய்யும் வழக்கத்தை மேற் கொண்டால், சோம்பல் பறந்து விடும்.

அழகான கண்களுக்குள்ளே துயரமான கண்ணிர் ஊறி வருவது ஏன்? . . ஒளிமயமான உலகத்தை இருள் மயமாக்கும் உள்ளங்கள் இருப்பதைக் கண்டு!

சில சமயங்களில் நாம் எவ்வளவு முயன்றாலும், கருதிய செயல் முடியாமல் போய் விடுகிறதே! ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தாற் செயின். உரிய காலத்தைத் தேர்ந்தெடுத்து செய்யத் தக்க இடத்தே செய்தால், எந்த முயற்சி" தோல்வியடைவதில்லை.

நாம் நினைப்பது நடக்கவில்லையே..என்ன செய்வது? நினைப்பது நடக்கும் வரை முயற்சி செய்ய வேண்டும். அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும். எறும்பு ஊரக் கல்லும் குழியும். தொடர்ந்து செய்யும் முயற்சி வெற்றியைக் கிட்டுவிக்கும்'

0 மனிதன் கவலையை மறக்க என்ன செய்யவேண்டும்!