பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமயம் $3

s

மனிதாபிமானமுள்ள தமிழ் மக்கள் மத்தியில் ஆக் கும்பலின் வெறிப்பேச்சுக்கள் விலைபோகவில்ல்ை. நமது நாட்டுச் சமயத் தலைவர்கள், பொதுமையுணர்வு களையே பரப்பி வாழுகிறார்கள்.

சோதிட நிலையங்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? மக்கள் அறியாமையையும் மூட நம்பிக்கையையும் அடிமுதலாக வைத்துப் பணம் தேடுபவர்களே சோதிடர்

பாவத்தைப் படைத்த இறைவன் மனிதனை ஏன் படைத்தான்? அதைச் செய்து விட்டுத் தன்னிடம் மன்னிப்புக் கேட்கட்டுமே என்றுதான், ஆனால், மனிதன் மன்னிப்புக் கேட்பது கேவலம் என்று நினைக்கிறான்.

தண்ணிரைக் கொண்டு விளக்கெரிக்க முடியுமா? தண்ணிரை (எண்ணெய்க்குப் பதிலாக ஊற்றி விளக்கு எரிக்க முடியாது. அவ்வாறு எரித்ததாகச் சொல்வது கட்டுக்கதை நீர் வீழ்ச்சிகள், அலைமோதும் கடற்கரை கள் ஆகிய இடங்களில் மின்சாரம் உண்டாக்கத்தண்ணிர் பயன்படுகிறது. மின்சாரம் நீரில் இருந்து கிடைத்த தன்று; நீரின் உதவியால் கிடைத்தது.

கடவுளை நம்பினார் கைவிடப்படார் இதை நீங்கள் நம்புகிறீர்களா? கடவுளை நம்பி ஒரு செயலைத் தொடங்கியவர்கள் தடை பல கடந்து வாழ்வில் இலட்சியவெற்றியடைந் ததை பார்த்திருக்கிறோம். நம்பாத சிலரும் இடை விடாது முயன்று எண்ணியதை எய்தியது கண்டிருக் கிறோம். நம்பிக்கொண்டு எச்செயலும் செய்யாது சோம்பியிருந்தவர் சோர்ந்து மடிந்ததையே கண்டோம். தன்னம்பிக்கையும் கடவுள் நம்பிக்கையும் செயல்

வெற்றிக்கு ஊட்ட மருந்து போன்றவை.