பக்கம்:என் அண்ணாமலை நகர் வாழ்க்கை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வறைந்த எட்டாண்டுகட்குப் பின்னரும் மறைந்த நான்காண்டுகட்குப் பின்னரும் 1985-இல் வெளியா னது. 1940-இல் நூறு சொற்கட்குப் பாவாணர் வரைந்த வேர்ச்சொற்சுவடி, எழுபத்துமூன்று சொல்லாய்ச் சிதைந்து புலவர்மணி இரா. இளங்குமரரால் மீட்கப் பெற்று 1986 இல் வெளியாகியுள்ளது. 'சொல்லாராய்ச்சி நெறி முறைகள்' 'இசைத்தமிழ்ச் சரித்திரம்' ஆகிய இரண்டும் பாவாணரால் எழுதப்பெற்று அச்சேறவியலாமல் அழிந்தன. அவர் அரும்பாடுபட்டுத் தொகுத்து ஐம்பது பக்க ஆராய்ச்சி முன்னுரை வரைந்த 'பழமொழி பதின்மூவாயிரம்' அச்சீட்டாளரிடமிருந்து மீள முடியாது அழிந்தது. பாவாணர் தம் நூல்களில் ஆங்காங்கே சுட்டுகின்ற தொல்காப்பிய வளம்' 'சிலப் பதிகாரச் சிறப்பு' 'முத்தமிழ்' 'மொழிச்சிக்கல் தீர்வு' எனும் நூல்கள் என்னவாயின என்றும் அறிய முடியாத வாறு அழிந்தன. பாவாணர் தம் வாணாளில் எழுதி முடிக்க விரும் பியவை 'செ. சொ. பி. அகரமுதலி' பதின்மூன்று மட லங்க ள், The Lemurian Language and its ramification 'தம் வாழ்க்கை வரலாறு' ஆகியன அவற்றை எழுதி முடிக்குமளவு அவர்தம் வாணாள் நீளவில்லை. இவையே அல்லாமல் செந்தமிழ்ச் செல்வி தமிழ்ப் பொழில், தென்மொழி, தமிழ்ப்பாவை, தமிழம் பல்வேறு பள்ளி கல்லூரி இதழ்கள், சிறப்பு மலர்கள் ஆகியவற்றில் வரைந்த கட்டுரைகள் பல்பொருள் தழுவியவை; பன்னூற்றுக்கணக்கின. இந்நூல்களும் கட்டுரைகளும் தமிழர்தம் கைகளில் திகழ வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறுமா? முடவன் கொம்புத்தேனை விரும்பிய கதையாகுமா?