பக்கம்:என் அண்ணாமலை நகர் வாழ்க்கை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

20 அவர்கள் என்னிடம் “உங்களைப்பற்றி அரசமாணிக்க னாரும், ஒளவை. சு துரைசாமி அவர்களும் எழுதியிருக்கி றார்கள். ஆனால், எனக்கென்ன தமிழ் தெரியும்? சேதுவும் (தெ. பொ.) மீனாட்சிசுந்தரம் அவர்களும் இருக் கிறார்கள். அவர்கள் தாம் கவனிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். அதினின்று எனக்குள்ள வாய்ப் பியல்பை உய்த்துணர்ந்து கொண்டேன். இனி திருச்சி முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம் சென்றவிடமெங்கும் பேசும் பொழுதெல்லாம் அண்ணா மலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் தொகுப்பிற்கு நானே தக்கவனென்று பெருமுழக்கம் செய்தார். ஆயினும், திரு. நாராயணசாமி அவர்கள் பேரா. சேது அவர்கள் கீறின கோட்டைத் தாண்ட விரும்பவில்லை. பேரா. சேது அவர்கள் என்மீதும் தனித்தமிழிலும் பற்றற்றவர் என்பது எனக்கு முன்னரே நன்றாய்த் தெரியும். அதோடு, அண்ணாமலை நகரில் நடைபெற்ற கீழைக்கலை மா நாட்டில் பேரா.தெ.பொ. மீ. யொடு நான் கருத்து வேறுபட்டமையும் என் அமர்த்தத்திற்குப் பெருந்தடையாம் என்று சிலர் பேசிக் கொண்டனர். வேண்டுகோள் விடுத்து அரையாண்டாயிற்று. எத்தகை விளைவும் நேர்ந்திலது. முப் பேராசிரியர் முரண்டுகொண்டு எனக்கு முட்டுக்கட்டையிடுவதாக, செவிச்செய்திகள் வானில் உலாவின. TRLD இந்நிலையில், காலஞ் சென்ற பண்டகர் வரதராசலு அவர்கள் சேலம் வந்து, பண்டகர் இராசாராம் வள மனையில் விருந்தினராகத்தங்கினார்கள். அப்பொழுது பின்னவர் (பண்ட கர் இரா சா ராம்) அ. ம. ப. க, க. வேலையைப் பற்றியும் என்னைப் பற்றியும் முன்னவரிடம்