பக்கம்:என் அண்ணாமலை நகர் வாழ்க்கை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ச. சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறைத் தலைவர், பேராசிரியர், சேது, அரு. சென்னை மண்டலக் கல்லூரி ஓய்வு பெற்ற தலைமைத் தமிழ்ப் பேராசிரியர், தெ. பொ. மீனாட்சி சுந்தரம், சென்னை மண்டலக் கல்லூரிச் சமற்கிருதப் பேராசிரியர் திருஞானசம்பந்தம், - எ. அண்ணாமலைப் பல்கலைக் கழகக் கீழைக்கலைத் தமிழ்த் தலைவர், பேராசிரியர், இலெ. பெ. கரு இராமநாதன், அ. அண்ணாமலைப் பல்கலைக் கழகக் கலைத்துறைத் தமிழ்த் தலைவர், பேராசிரியர் சிதம்பரநாதன், கூ. அண்ணாமலைத் தமிழாராய்ச்சித் துறைத்தலைவர் பேராசிரியர், கோ. சுப்பிரமணியம், ஆகிய ஒன்பதின்மரைக் கொண்ட குழு ஏற்படுத்தப் பட்டிருந்தமை தெரிந்தது. இவ்வேற்பாடு நான் எள்ள ளவும் எதிர் பாராதது. இக்குழுவில் என்னளவு தமிழா ராய்ந்தவரேனும், என் பணியை மேற்பார்க்கத் தக்கவ ரேனும் ஒருவருமிலர். ஆயினும், எனக்கும் தமிழுக்கும் மாறான இருவராலோ மூவராலோ சூழ்ச்சியாக இஃது ஏற்படுத்தப்பட்டது. என்னை அண்ணாமலை நகரீனின்று விரைந்து வெளியேற்றுவதற்கு அமைத்த தள்ளிவெட்டி இதுவென்பதை உடனே கண்டு கொண்டேன், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழாராய்ச்சி யாளராகவிருந்த பேராசிரியர் இரா. இராகவையங்காரும் சமற்கிருதப் பேராசிரியராகவிருந்த பர், சுப்பிரமணிய (சாத்திரியா)ரும், தாம் உழுதியுள்ள நூல்களில் உண்