பக்கம்:என் அண்ணாமலை நகர் வாழ்க்கை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

செய்யப் பட்டிருந்ததேனும், குழு ஆற்றுப்படுத்தியவாறே என் பணி நடைபெறல் வேண்டுமென்று அமர்த்தோ லைப் பின்னிணைப்பிற் குறிக்கப்பட்டிருந்ததால், குழுக் கூடும் வரை அப்பணியிலீடுபட என்னால் இயலவில்லை. ஆராய்ச்சித்துறைக் கூடத்தில் மொழிநூல் துறைக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடமும், ஒரு நாற்காலியும், ஒரு நிலை மேடையும் (மேசையும்) தவிர வேறொன்றுமில்லா மலும், ஒரு நெடும்பக்கம் மறைப்பின்றியும் இருந்தது. பன்னாட்பின் 8-4-1957 அன்று , அ.ம.ப.க.க. திரா விட மொழிநூல் துறைத் தொடக்கக் கூட்டம் நடை பெற்றது. பேரா. தெ. பொ. மீனாட்சிசுந்தரனார் தவிர உறுப்பினர் அனைவரும் வந்திருந்தனர். தலைவர் பர். சட்டர்சி விரிவான தலைமையுரையொன்று நிகழ்த்தினார். கூட்டம் முழுதும் ஆங்கிலத்திலேயே நடைபெற்றது. செயலாளர் என்ற முறையில், நான் ஓர் அறிக்கை எழுதிப் படித்தேன். தலைவர் தம் உரையிடையே "ஒவ்வொரு நாட்டிலும் நாகரிகம் அந்நாட்டு மொழியோடு தொடர்பு உள்ளது. இந்திய நாகரிகமெல்லாம் சமற்கிருத இலக் கியத்திலேயே எழுதப்பட்டுள்ளது. ஆதலால் இந்திய நாகரிகம் ஆரியரதே” என்று கூறியதால், என் அறிக் கையையொட்டி, “இந்திய நாகரிகமெல்லாம் முதன் முதல் தமிழிலக்கியத்திலேயே எழுதப்பட்டிருந்தது. அவ் விலக்கியம் முழுதும் இறந்துபட்டபின், அதன் மொழி பெயர்ப்பான சமற்கிருத இலக்கியமே மூலம்போற் காட்சி யளிக்கின்றது. ஒரு புகைவண்டி வழிப்போக்கன் கையிற் சீட்டில்லாவிடின், அம்மட்டிலேயே அவன் சீட்டு வாங்காமற் செல்பவன் என்று முடிவு கொண்டு விடமுடியாது. ஒருகால் சீட்டுத் தவறிப் போயிருக்க லாம்; அல்லது அடுத்தவன் திருடியிருப்பான்" என்று ரைத்து அவர் கூற்றை மறுக்க வேண்டியதாயிற்று.