பக்கம்:என் அண்ணாமலை நகர் வாழ்க்கை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

34 தும், பொருளும் மொழியமைதியும் அயலார்க்கு விளங்குமாறு வெளியிடுதல் வேண்டும். குறிப்பு : இதற்கு முந்திய கட்டுரை முழுதும் நினைவிலி ருந்தெழுதியதால், குழுவமைப்பையும் அதன் உறுப்பாண்மையும் பற்றிய சில செய்திகள் பிற ழக் கூறப்பட்டுள்ளன. இக் கட்டுரையிற் கூறப்பட்டுள்ளனவே சரியெனக் கொள்க. பணிசெயற்படலம் 2-ஆம் பகுதி அண்ணாமலைப் பல்கலைக்கழகத் திராவிட மொழியி யற் குழுவின் முதற் கூட்டத்தில் முடிபு செய்தவாறு, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய நான் மொழிக்கும் ஒவ்வொரு விரிவுரையாளரை அமர்த்த முயற்சி தொடங்கியது. முதற்கண் திருவாளர் இராதா கிருட்டிணனார் (எம்.ஏ.) தமிழுக்கு அமர்த்தப் பெற்றார். இவர் பூனாத் தெக்காணக் கல்லூரி நடத்திவரும் வேனிற் பள்ளியிலும் (இலை) உதிர்காலப் பள்ளியிலும் வண்ணனை மொழியியற் பயிற்சி பெற்றவர். நானும், எனக்குப் பணிக்கப் பட்டவாறு, நான் தொகுக்கவிருந்த தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலியின் போலிகையாக, ஐம்பது சொற்கட்கு வேரும் வரலாறும் பொருளும் விளக்கமும் எழுதத் தொடங்கினேன். வழக்கப்படி, தெக்காணக் கல்லூரியின் வேனில் மொழியியற்பள்ளி மேழ (சித்திரை) மாத நடுவில் (அதா வது மே மாத முதலாம் பக்கல்) தொடங்குமென அறி விப்பு வந்தது. என் மொழி நூற் கல்விப் பரப்பையும் ஆராய்ச்சி யாழத்தையும் நிலைத்த கொள்கையையும் மாரு மனப்பான்மையையும் வாழ்க்கைக் குறிக்கோளை