பக்கம்:என் அண்ணாமலை நகர் வாழ்க்கை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிப்பாக முன்னுரை


திருக்குறளும் தேவநேயமும் தமிழர்களுக்கு நன்றாகுங்காலத்தும் அன்றாகுங்காலத்தும் பொன்றாத் துணையாயிருந்து பயன் படுபவை; பலன் தருபவை ; வழிகாட்டுபவை., அவ்விரு நெறிகளையும் நினைக்கவும் சொல்லவும் செயலாக்கவும் தமிழர் மறந்தால் அன்றே அவர்கட்கு வீழ்ச்சியும் அழிவும் தாமே சூழும்.

தமிழ், தமிழர் நிலை இன்று மிகவும் இரங்கத்தக்கதாயுள்ளது. தமிழர்க்கு இஃதோர் இருண்ட காலம். இருளில் சிக்குண்டு மருள்வார்க்குக் கைவிளக்கும் வழி காட்டுமெனின் இருண்டகாலத்தே அரண்டுபோய் நிற்கும் தமிழர்க்கு அறச்சடரும் மொழிச்சுடருமாய் அமைந்த இருஞாயிறு இருந்தும் பயன் கொள்ளாமை யார் குற்றம்? அவற்றைப் பயன்கொள்ளுமாறு தெருட்டாமை யார் குற்றம் ? பரப்பாமையும் பயன் கொள்ளாமையும் நம் குற்றமே! தமிழர் குற்றமே!

தேவநேயத்தைப் பயன் கொள்ளுமாறு பரப்புதலே பாவாணர் பதிப்பகத்தின் தோற்றம்; நோக்கம். தொடங்கி மூன்றாண்டுகட்குமேலாகியும் இப்போதே ஒரு சிறு நூலை வெளியிடும் நிலை உருவாகியுள்ளது. இவ்வமைப்பு விரிந்து பெருகி வளர்ந்து தன் கடனை முற்ற முழுதாய் ஆற்ற வேண்டுமெனின் அனைவர் துணையும் இன்றியமை யாதது. பணியாற்ற விரும்புவார் அவரவர் ஆற்றலுக் கேற்ற பணியை மேற்கொள்க. புரவலராகுக; உறுப்பின ராகுக; ஆக்குக., வெளியாகும் நூலை விற்றுப் பரப்புக.

ஓரிருவர் முயற்சியிலிருந்து ஓராயிரவர் ஈராயிரவர்