பக்கம்:என் அண்ணாமலை நகர் வாழ்க்கை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பர், சட்டர்சியின் கட்டுரைப் படிகள் சில பெற்றுத் தமிழ்ப் பற்றுள்ள தமிழ்ப் புலவர் சிலரிடமும் தமிழன்பர் சிலரிடமும் காட்டினேன். அவருட் சிலர் வருந்தினர்; பலர் அதுவுமில்லை. மேற் கொண்டு சில படிகள் கேட்ட பொழுது கிடைக்கவில்லை . அ.ம.ப.க.க. பதிவாளரால் அது பரவுவது தடுக்கப்பட்டதென்று தெரிந்தது. அதன் பின் நான் நேரிற் சென்று பதிவாளரிடம் கேட்டேன். அவர்கள் "வேண்டியவர் எனக்கு நேராக எழுதிப் பெற் றுக் கொள்ளட்டும்" என்று சொல்லிவிட்டார்கள். சிலமாதம் பொறுத்து, பர். சட்டர்சி அண்ணாமலை நகர் வந்து நான் தொகுக்கவிருந்த செந்தமிழ்ச் சொற் பிறப்பியல் அகரமுதலியின் போலிகையான, ஐம்பான் சொல் விளக்கச் சுவடியைப் பார்வையிட்டனர். எடுத்த அடியிலேயே, தமிழர் குமரிக் கண்டத்தி னின்று வந்தவரென்னும் உண்மை வரலாற்றுக் கூற்றை யும், அச்சன் என்பது அத்தன் என்னும் தென் சொல்லின் திரி பென்னும் சொல் வரலாற்றையும் அவர் ஒப்புக் கொள்ள மறுத்தனர். 'நீ தன்னந்தனியாகப் போர் புரி கின்றாய்" (You are fighting a lonely fight) என்றார். புறநானூறு, கலித்தொகை, சிலப்பதிகாரம், அடி யார்க்கு நல்லார் உரை. இறையனார் அகப் பொருளுரை முதலியவற்றினின்று குமரி நாட்டுச் செய்திக்குச் சான்று காட்டி, பர், சாமிநாதையர், பேரா. மு. இராகவையங்கார் முதலியோரும் முக்கழக வரலாற்றை ஒப்புக் கொண்ட தாகவும் கூறினேன். ஆயினும், அவர் கருத்து மாற வில்லை. இதைப்பற்றி விரிவாக எழுதி அவருக்கனுப்ப வேண்டுமென்று மட்டும் சொன்னார். அத்தன் அத்தி என்பன முறையே தந்தையையும் தாயையும் குறிக்கும் தென் சொல்லென்றும்; அவை