பக்கம்:என் அண்ணாமலை நகர் வாழ்க்கை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

49 அதனால் என்னை மொழி நூல் துறையினின்று பொதுத் துறைக்கு மாற்றியிருப்பதாகவும், பேரா. சேது சொன்ன தாக, (ஓய்வு பெற்ற) குமரபாளைய ஆசிரியப் பயிற்சிக் கல்லூரி முதல்வர் பேரா. ஆறுமுகனார் என்னிடம் கூறி னார். நான் இதை அ. ம. ப. க. க. புகுமுன்ன ரே எதிர் பார்த்தேனாதலின், எனக்கு இதில் ஒன்றும் வியப்பில்லை. ஆண்டிறுதியில், திரு. சண்முகனாரும் அமெரிக்கா வினின்று திரும்பிவந்தார். அவர் பெற்ற வண்ணனை மொழியியற் பயிற்சிப்படி அவர் பணியைத் தொடங் கினார். சில மாதம் ஒரே அறையில் அவருடன் இருந் தேன். அது திரிசங்கு வானக நிலை போன்றது. ஆண்டு முடிந்து வேனில் விடுமுறை விடப்பட்டது. அடுத்த கல்வி யாண்டுத் தொடக்கத்தில், பேரா. கோ. சுப்பிர மணியனார் தலைமையிலிருந்த தமிழாராய்ச்சிப் பொதுத் துறைக் கூடத்தில் எனக்கொரு நாற்காலியிடப்பட்டது. நாற்காலியென்றது இயற்பொருளிலேயே, ஆங்கிலத்திற் போல் ஆகுபெயர்ப் பொருளிலன்று. அன்றிருந்த நிலை மேடையும் பலர்க்குப்பொது. அதனால் வட நாட்டுப் புகலிலிபோன்ற அயன்மையுணர்ச்சி எனக்கு நீண்ட நாளிருந்து வந்தது. நிலைமை தெரி படலம் - நான் மொழி நூல் துறையில் தனிப்பட்ட துணைப் பேராசிரியனாயிருந்த பொழுதே, என் அறையில் எனக் கேற்ற நூல் நிலையம் இல்லை. மொழியியல்துறை நூல் நிலையத்திற்கு வேண்டிய நூற்பெயர்ப்பட்டியை மட்டும் விரிவாகத் தொகுத்து அனுப்பச்சொல்லி, அடிக்கடி ஓலை வந்தது. யானும் உடனுடன் தொகுத்துவிடுத்தேன், ஆயினும், அந்நூல்களும் அவற்றைத் தாங்கும் இருப்பு நிலைப்பேழைகளும் வந்துசேர ஓராண்டாயிற்று அதை