பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நியுஜெர்ஸி மாநிலத்தில் உள்ளவை 117

முறைகள் இருந்தன. 25 சென்ட் போட்டு ஆடும் களத்தை நோக்குவோம். இதன் முன்னிலையில் 2500, 2000, 1500, 1000, 500, 200 ... என்ற வரிசைகளும்; 1000, 500, 200, 50....... என்ற வரிசைகளும் காட்டப் பெற்றுள்ளன. 25 சென்ட் போட்டு விளையாடும்போது எதுவேனும் விழலாம். சிலர் போட்டு விளையாடும் போது பலமுறைகளில் 2, 5, 20, 40 என்று விழுந்தன. சிலசமயம் ஒன்று கூட விழுவதில்லை. போட்டுக் கொண்டே இருக்க வேண்டியதுதான். 2500 விழும் என்ற ஆசையால் போட்டுக் கொண்டே இருக்க வேண்டியதுதான் ஆசை எவரையும்விட்டு வைப்பதில்லை.

ஆக்கம் கருதி முதல் இழக்கும் செய்வினை ஊக்கார் அறிவுடை யார்5

என்ற குறள் எச்சரிக்கை செய்த போதிலும் ஆசையே மீதூர்ந்து நிற்கும். சிலர் 20 டாலர்கள் வரை போட்டு 5 டாலர்கள் கிடைத்ததையும், சிலர் ஒன்றும் கிடைக்காததையும் கண்டோம். ஒரு டாலர், 5 டாலர் வைத்து விளையாடுபவர்கட்கு இழப்பு அதிகமாக இருக்கும்; சிலசமயம் வரவும் இருப்பதுண்டு. விளையாடும் சீட்டுகள் வைத்து விளையாடும் முறைகளை நாங்கள் பார்க்கவில்லை. இரண்டுமூன்று நாட்கள் தங்கினால் அனைத்தையும் பார்க்கலாம். சிலவாரங்கள் தங்கிப்பார்த்தால் அனைத்து ஆடுகளன்களையும் பார்க்க வசதியாக இருக்கும். இரவில் விளக்குகள் போடப்பெறுவதால் ஆடுகளக் காட்சிகள் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும்.

தங்குவதற்கு ஒவ்வொரு ஆடுகளத்திலும் தங்கும் அறைகள், நாட்டியம் ஆடும் இடங்கள், குடி போன்ற கேளிக்கைகளைக் காணும் வாய்ப்புகள் இருக்கும். அலுவலுக்குப் போகும் இளைஞர்கள் வாரம் ஒரு முறை, இரு முறை சென்று கலந்து கொள்வதைப் பார்க்கலாம். ஓய்வு பெற்ற ஓய்வு ஊதியம் பெற்றுவரும் முதியோர்கள்தாம் (இவர்கட்குக் குடும்பம் என்று ஒன்று இராததால்) அதிகமாக இந்தச் சூதாட்டத்தில் பங்கு பெறுகின்றனர். அட்லாண்டிக் மாக்கடல் கரையோரத்தில் இந்த ஆடுகளன்கள் அமைந்திருப்பதாலும் ஆடுகளன்களில் புறம்பே கடற்கரையையொட்டி பலகைகளான தளம் அமைக்கப் பெற்றிருப்பதால் பலர் நடந்து கொண்டு கடல் அழகையும் ஆடுகளன் அமைக்கப்பெற்ற அழகையும் கண்டுகளிப்பதைக் கண்டு மகிழலாம்.

ஆடுகளன்களினின்றும் திரும்பும்போது வேறு வழியில் திரும்பினோம். திரும்பும்போது பிற்பகல் மணி 5.30.நியுஜெர்சியிலிருந்து ஒரு பாலம் வழியாக’

6. குறள் - 463(தெரிந்து செயல்வகை) 7. Outer Bridge.