உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஐக்கிய நாடுகள் ♦ 23

ஒப்புக் கொள்ளுகின்றனர்; 6. உலக அமைதியையும் பாதுகாப்பையும் உறுப்பினர் நாடுகளைப் போலவே உறுப்பினரல்லாத நாடுகளும் அதே கடமைகளைக் கொண்டுள்ளனர் என்பதை ஐ.நா. ஒருவகையில் செயற்படுவதற்கு ஒப்புக் கொள்ளுகின்றது; 7. உறுப்பினர் நாட்டுக்குள் தமது எல்லைக்குள் எடுக்கும் நடவடிக்கைகளுள் ஐ.நா. தலையிடாது என்ற விதியை ஒப்புக் கொள்ளுகின்றது. ஆனால், இந்த நடவடிக்கைகள் மற்ற நாடுகட்குத் தீங்கு பயப்பதாக அமையக் கூடாது.

உறுப்பினராகும் முறை: 1945-இல் விதிமுறைகளில் கையெழுத்திட்ட நாடுகள் தாம் முதல் உறுப்பினர்களாக அமைந்தனர். அன்று முதல் வேறுபல நாடுகளும் இந்த அமைப்பில் சேர்ந்து கொள்ள வேண்டுகோள்கள் விடுத்தனர். ‘அமைதியை விரும்பும் நாடுகள் அனைத்தும்’, விதிகளில் கூறும் கடமைகளைக் கடைப்பிடித்து நடைமுறைப்படுத்த மனதார ஒப்புக் கொள்ளுமானால் ஐ.நா.வில் உறுப்பினராகச் சேரலாம் என்று இந்த நிறுவனம் வரவேற்கின்றது. பாதுகாப்பு ஆலோசனை அவையும் பொதுப்பேரவையும் உறுப்பினராவதற்குரிய விண்ணப்பங்களை அங்கீகரிக்க வேண்டும். விதிமுறைகளுக்கு மீறி ஒருநாடு செயற்பட்டால் அந்த நாடு உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிக நீக்கத்திற்கு உட்படுத்தப் பெறலாம்; அல்லது ஐ.நா.விலிருந்தே வெளியேற்றப்படலாம்.

விதிகள் மாற்றம்: விதிமுறைகளில் மாற்றம் செய்ய வேண்டுமானால் அதற்கும் இடம் தந்துள்ளது. மாற்றங்கள் வேண்டுமானால் இருமுறைகளில் கொண்டு வரப்பெறலாம். பொதுப்பேரவை உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஒப்புக்கொண்டால் மாற்றங்கள் செய்யப்பெறலாம்; அல்லது பொதுப்பேரவையில் மூன்றில் இரண்டுபங்கு உறுப்பினர்களும் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவில் ஏதாவது ஒன்பது உறுப்பினர்களும் பொது மாநாட்டைக்[1] கூட்டி விதி முறைகளில் மாற்றம் செய்வதைக் குறித்து ஆராயலாம். இந்த மாநாட்டில் மூன்றில் இரண்டு பங்கு பேர் வாக்குகள் அளித்தால் தான் மாற்றம் பற்றி ஆராயலாம். பாதுகாப்பு ஆலோசனைக் குழு அவையின் நிரந்தரமான ஐந்து உறுப்பினர்கள் உட்பட ஐ.நா.வின் எல்லா உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்தால்தான் இந்த மாற்றம் அமுலுக்கு வரும்.

ஐ.நா. வினுடன் தொடர்புள்ள தனிப்பட்ட முறையில் செயற்படும் அமைப்பில் முக்கியமானவை ஐந்து. அவை:


  1. General Conference