உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எரிநட்சத்திரம் * 8

சுலபமாய் மறந்து விடக்கூடிய பெயரில்லை. காண்டேகரின் 'எரிநட்சத்திரம்' நாவலில் எரிநட்சத்திரமாய் வருபவள்.உல்கா! அந்த உல்க என்னும் எரிநட்சத்திரத்தின் பின்னணிவேறு; முருகுகந்தரம் படைத்துள்ள 'வீணா' என்னும் எரிநட்சத்திரத்தின் பின்னணி வேறு. அப்பாவும், மகள். 'உல்கா'வும் பேசிக்கொள்ளும் உரையாடல் நினைப்பதற்குரியது:

"இந்த நட்சத்திரம் எங்கே போகிறது?"
"அது பூமிக்கு வருகிறது"
“அது தனியாகவா வருகிறது?
மீதி நட்சத்திரங்கள் ஏன் வருவதில்லை?"
“மீதி நட்சத்திரங்களுக்கு ஆகாயத்தில் மின்னிக் கொண்டே உட்கார்ந்திருப்பது பிடிக்கிறது.”

"இதற்கு ஏன் அது பிடிக்கவில்லை?”

"கம்மா மின்னி என்ன செய்வது என்று இதற்குத் தோன்றுகிறது...”
நாவலின் மற்றுமோரிடம்:

"பூமியை விட்டுவிட்டு இந்த வானத்தில் ஒட்டிக் கொண்டு இருப்பதில் பயன் என்ன? வாருங்கள் போவோம். இந்த ஆகாயத்தில் நட்சத்திரங்களாக இருப்பதை விட, பூமியில் போய்க்கல்லாக இருப்பது எவ்வளவோமேல்"என்றன.

ஒரு நட்சத்திரம் அறுந்தது. ஓர் உற்கை விழுந்தது.
மற்றொரு நட்சத்திரம் அறுந்தது.
மற்றோர் உற்கை விழுந்தது.
பரபரவென்று நட்சத்திரங்கள் கீழே வீழலாயின. பொடி சூர்ணமாகும் போதும் அவை சிரித்துக் கொண்டே இருந்தன.
நட்சத்திரங்கள் யாவும் விழுந்தன...

இந்தப் புரட்சியைச் செய்தது எது?
அந்த முதல் 'எரிநட்சத்திரம்'!...
முருகுகந்தரத்தின் வசன புதுக்கவிதை நாடகத்தில் எரிநட்சத்திரமாக வருகிறாள் வீணா. தொடக்கத்தில் 'மஹாகவி'யின் மேற்கோளாகக் காட்டப்பட்டிருந்த “புதிய களங்கள்-புதிய போர்கள்-புதிய வெற்றிகள்-” என்ற