உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11 * முருகுசுந்தரம்

விபத்தில் இறந்தார்... என்று வானொலி செய்தியை ஒலிபரப்புகிறது.. ஆம்!

வீணா -
ஈழப் போராளிக் குழுவின்
தற்கொலைப்
படையைச் சேர்ந்தவள்!
பல்கலைக்கழக வாழ்க்கை
அவளுக்கொரு போர்வை
வெடிகுண்டை
மடியில் கட்டி வந்து
வெடிக்கச் செய்தவளே
அவள்தான்!” .
என்று நெடுமுடி என்னும் சி.பி.ஐ அதிகாரி அறிவிக்கிறான்,!

நாடகத்தின் பெயர், காட்சிகள், பாத்திரங்களின் செயல்பாடுகள், வீணா எழுதிய 'விட்டில் பூச்சி' குறியீட்டுக் கவிதை, இந்திய-இலங்கைப் பிரச்சனைகள், அதனால் இந்தியத் தமிழ் மண்ணில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு நிகழ்ச்சிகள். இப்படி நம் கருத்தில் ஒவ்வொன்றாய்ப் படமாக விரிகின்ற போது நாடகத்தின் முடிப்பு எப்படி இருக்கப் போகிறது என்று ஊகித்து விடமுடிகிறது...

வீணாவின் எரிநட்சத்திர முடிவைப் படித்தவுடன் சிலருக்கு அதிர்ச்சி ஏற்படலாம்; சிலருக்கு ஏற்கெனவே தமிழ்நாட்டில் நிகழ்ந்த நிகழ்ச்சியின் மறுபதிப்புப் போன்றது. தானே என்ற அலட்சியும் இருக்கலாம்...

சமகாலத்து அரசியல்-சமுதாய-வரலாற்று.நிகழ்ச்சியை மிக எளிய தமிழில்-படிக்கவும் நடிக்கவுமான தமிழில்-கவிஞர் ஆக்கித் தந்த பிறகு, வாசகர்கள் சில விவாதங்களை எழுப்பிக் கொள்ளவேண்டும்-விவாதிக்கவேண்டும்.

8


மரபுத்தமிழை முறையாகப் பயின்றவரும், பாவேந்தரின் தலைமாணாக்கர்களுள் ஒருவருமான முருகுசுந்தரம் இப்படிப் புதியபாணிக் கவிதை நூல் படைக்கலாமா என்று