உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13 * முருகுகந்தரம்

அவர்கள் நண்பர்களை ஐக்கியப்படுத்தத் தவறியது; மறுபாதி காரணம் உண்மையான எதிரியார் என்று தெளிவுபடுத்திக் கொள்ளாதது.

இந்த ஐக்கியப்படுத்தலும், தெளிவு படுத்தலும் இருந்திருக்குமானால் இங்கே தமிழ்க்குருதியையும் இந்தியக் குருதியையும் சிந்த வைத்திருக்கமாட்டார்கள்.

நல்லவேளை!முருகுசுந்தரம் படைத்த 'வீணா' எதிரியார் என்று தெளிவாகவே உணர்ந்திருக்கிறாள்.

எரிப்பதற்கான இடம் இந்தியாவாக-தமிழ்நாடாக இருந்துவிட்டது. வீணா'வைப் பொறுத்தமட்டில் இது தவிர்க்க முடியரததே!

ஆனால்,"யாரை?" என்பதில் வீணா தெளிவாகவே இருந்திருக்கிறாள். இந்த 'எரிநட்சத்திரம்' பற்றி எல்லோரும் விவாதிக்க வேண்டும், சற்று உரக்கவே விவாதிக்க வேண்டும், எதற்காக?

-இனிமேலாவது பின்னடைவுகள் ஏற்படாமல் இருக்க வேண்டுமல்லவா அந்தப் போராட்டத்திற்கு, அதற்காக,

சிவகங்கை
31–8-93

மீரா