பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எரிநட்சத்திரம்

மூன்றாம் பதிப்பின் முன்னுரை

இயல் இசை நாடகம்-
முத்தமிழ்
இன்றைய இயல்-
புதினம்,சிறுகதை, கட்டுரை யென்று
கிளைவிட்டுத் தழைத்திருக்கிறது.

சென்ற நூற்றாண்டில்
யாழை மீட்டியவர்கள்
விபுலானந்தர்;
ஆபிரகாம் பண்டிதர்!

நரம்புகளைத் தடவி
நல்லிசை வகுத்தோர்
அருணாசலக் கவிராயர்,
கோபால கிருட்டின பாரதி.

இந்த நூற்றாண்டில்
சில இளவேனிற் குயில்கள்;
பாரதி, பாரதிதாசன்,
தேவி, தண்டபாணி தேசிகர்
தூரன், திருச்சி பரதன்.

தமிழில்-
அளவற்ற மேடை நாடகங்கள்.
அறிஞர் அண்ணா
அதிலும் புரட்சி செய்தார்.

மனோன்மணீயம் என்னும்
ஆலின் அடியில்
சில விழுதுகள்.

எரிநட்சத்திரம்-
இன்றைய நிதர்சனம்

இதை இளங்கலைப்பட்டவகுப்புக்களுக்குப் பாடமாக ஏற்ற பாரதியார், மதுரை காமராசர் ஆகிய பல்கலைக் கழகங்களுக்கு நன்றி.

சேலம் - 16.
1–7-2000

முருகுசுந்தரம்