பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127 ளாடை. மேலே தூய வெண் சொக்காய். அதன்மேல் வெண்துண்டு ஒன்று; அத்தனையும் கதர். அதிக உயர மில்லாது சற்று மெலிந்த இவர், மென்மையாகத் தொடங்கிஞர். அவ்வினிய குரல் தெள்ளு தமிழ் பேசிற்று. இனிய தமிழ் பேசிற்று. இலக்கிய தமிழ் பேசிற்று. அரசியல் தமிழ் பேசிற்று. அத் தென்றல் மெள்ள மெள்ள பெருங்காற்ருயிற்று. விடுதலைப் புயலாகி வீசிற்று. நெடுநேரம் வீசிற்று. மகுடி கேட்டு ஆடும் நாகம்ென மாறினர் கூட்டத்தினர். நவீன அரசியல் கருத்துகளை வ்ாரிவழங்கும், தமிழ்த் தென் றலைப் போற்றினர். விடுதலை வேட்கை கொண்டு வீறுபெற்றன்ர். பெறுவோம் உரிமையை என்று பொங்கினர். வேடிக்கை பார்க்க வந்த கூட்டத்தை, இந்திய விடுதலை வேட்கை கொண்ட கூட்டமாக்கி, தமிழ்ப் பற்றுடைய கூட்டமாக்கி, சமத்துவ உணர்ச்சி பெற்ற கூட்டமாக்கியதும் அமர்ந்தார் அச் சாது. யாரோ அவர்? தமிழ் நாட்டில் இந்திய விடுதலை இயக்கத்தைப் பட்டிதொட்டியெல்லாம் பரப்பிய பெரியோர்கள் சிலருள் ஒருவர் அவர். முன்ைேடித் தலைவர்களுள் ஒருவர் அவர். இக் கால அரசியல், பொருளியல், சமுதாய இயல் கருத்துகளையெல் லாம் தமிழிலே, எளிய தமிழிலே, இனிய தமிழிலே, துள்ளுநடைத் தமிழிலே பேசி, எழுதி வாழ்ந்த தமிழ்த் தென்றல் அவர். தொழிலாளர் இயக்கம், சமதர்மம், பொது உடைமைக் கொள்ன்கயெல்லாம் தமிழ் நாட்டின் பொது மக்களுக்கு அறிமுகப் படுத்திய முன்னுேடித் தலைவர்கள் சிலருள் ஒருவராகிய அவர், தேசத் தொண்டர், சமயத் தொண்டர், சமதர்மத் தொண் டர், திரு. வி. க. என்று செல்லமாக அழைக்கப்படு பவர். அன்று நாங்கள் கேட்டது. எழுச்சி பெறச்