பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S 7 கருமவீரர் காமராசரின் சிறை வாழ்வும், தாய் நாட்டின் விடுதலைக்காகத் தன்னையே அர்ப்பணித்த அறச்செயலும் அருகில் வந்தன. பாஞ்சால சிங்கம், அறிஞர்களுள் ஏறு, தொண்டர்களுள் பெருந் தொண்டராம் லாலா லஜபதிராய், தாய்நாட்டின் தன்மானப் போராட்டத்தில் தடியடிபட்டதும், அதன் விளைவாக மாண்டதும் காட்சியளித்தன. கண்ணிரைப் பெருக்கின. தேசபக்த செஞ்சுடர் பகத் சிங் தூக்குக் கயிற்றை முத்தமிட்ட தியாகம் மேலும் கண்ணிரைப் பெருக்கிற்று. எத்தனை தேச பக்தர்கள், எவ்வளவு விலைகொடுத்துப் பெற்ருர் கள் நம் சுதந்திரத்தை! கண்ணினுமினிய அச் சுதந்திரத்தைக் காக்க இன்றைய இந்தியத் தலை முறை செய்யப்போகும் தியாகமென்ன? இப்படிச் சென்று கொண்டிருந்த என் நினைவூர்தி சட்டென்று இறங்கிற்று. ஏன்? விரைந்து ஒடிக்கொண்டிருந்த எங்கள் பேருந்து வண்டி சட்டென நின்றதால். இவ்வூர் கர்னல். இங்குப் பதினைந்து நிமிடங் கள் மட்டுமே நிற்கும். இறங்கிப் போகிறவர்கள் இதை மறக்க வேண்டாம் என்று கண்டக்டர்' அறிவித்தார். காலாற இறங்கினேன். எதிரிலே, நல்ல காப்பிக் கடை தென்பட்டது. கால் நகர்ந்தது. மறு நிமிடம் கடைக்குள் இருந்தேன். கடை, துப்புரவான இடம். வசதியான சோபாக் கள், கண்ணுடி மேசைகள். காலியாயிருந்த ஒரிடத் தில் உட்கார்ந்தேன். பேருந்து வண்டியில் எனக்கு அடுத்த இடத்தில் அமர்ந்திருந்தவரும் அருகில் வந்து உட்கார்ந்தார். அவர், பட்டாளத்தில் கேப்டன்.