பக்கம்:எழிலோவியம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முகில்

1

லையிடைப் பிறந்தாய்; முல்லைப்
பூவிடை வளர்ந்தாய்; நன்செய்
தலையிடைப் புணர்ந்தாய்; தண்ணென்
கடலிடை முத்தம் ஈந்தாய்;
கொலையிடை மிகும்வெம் பாலை
மணலிடைக் குளிரும் சேர்த்தாய் !
அலைகடல் முகிலே ! உன்போல்
அரசோச்ச வல்லார் யாரே ?

2


தென்றலுக் குயிர்நீ ! முல்லைச்
சிறுகொடிக் குயிர்நீ ! வான
மன்றிலே திகழும் திங்கள்
ஞாயிறுக் குயிர்நீ ! மக்கள்
ஒன்றிய வாழ்வும் நீயே !
உரிப்பொருள் நீயே ! இன்பம்
குன்றிடா வளமும் நீயே !
குடிக்குயிர் நீயே ! வாழி!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழிலோவியம்.pdf/26&oldid=1301978" இலிருந்து மீள்விக்கப்பட்டது