உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எழிலோவியம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



47

6

ன்னரும் குழவி மேனி
தடவிப்பின் முதுகில் தட்டி
அன்னைகண் அயரும் ! கண்கள்
அயராத குழவி காலை
முன்தூக்கிச் சப்பும்; உன்னை
முறைத்திடும்; சிரிக்கும்; பேசும் !
உன்னிடம் குழவிக் கேற்ற
உரையாடல் உண்டு போலும் !

7


குழவிக்குக் காவல்; பெற்ற
குலக்கொடி யாட்குக் காவல்;
அழகுபே ரூர்க்குக் காவல்;
அணிமாடம் கூடம் காவல்;
இழிவழி குட்டை பாட்டை
எங்கெங்கும் காவல் ! காவல் !
வழுவிலா விளக்கே ! உன்போல்
கடமையை மறவார்யாரே !

8


ணமிலார் இருப்போர் என்ற
பண்பெலாம் நமது நாட்டில்
அணுவேனு மில்லை! பின்னர்
அணுகிற்றே அயலார் கூட்டால் !
பணமிலா ஏழை வீட்டில்
அவன்படும் பாடுன் பாடே !
பணம்நிறை வீட்டில் நீயோ
பலவுருப் பெறுகின்றாயே !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழிலோவியம்.pdf/48&oldid=1301741" இலிருந்து மீள்விக்கப்பட்டது