பக்கம்:எழிலோவியம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

3

டந்தையாய் இருந்த காலம்
மனத்தினில் புரட்சி செய்யக்
கிடந்தனள் கிழவி வீட்டில்
கிழிந்தபாய் கிடப்ப தைப்போல் !
துடுதுடுப் பான பேரன்
கிழவியின் தொடைமேல் குந்த
அடங்கிய மனத்தில் மீண்டும்
ஆயிரம் இறக்கை தோன்றும் !

4


அரிவை


கொலைக்கடல் குளித்த கண்ணின்
வீச்சுக்கூர் வாளின் வீச்சு !
அலையலை யாக நெஞ்சில்
அன்பினைப் பெருக்கும் பேச்சு !
மலைநுனி மார்பு ! கோவை
இதழ்களோ வடித்த தேனாம் !
கலைவிளக் காகும் காண்போர்
கண்கவர் அரிவை தோற்றம் !

5


ரிவையாம் காலந் தன்னில்
அகன்றிட்ட இரவும், நெஞ்சில்
உருவான திட்டம், கோட்டை
உன்னுவாள் கிழவி ! வீட்டுத்
தெருத்திண்ணை இணைந்த சிட்டைக்
கிளிகளைப் பார்ப்பாள்; நெஞ்சம்
உருகுவாள்; உயிர்ப்பாள்; ஒவ்வா(து)
ஏதேதோ உளறு வாளே !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழிலோவியம்.pdf/63&oldid=1299679" இலிருந்து மீள்விக்கப்பட்டது