பக்கம்:எழிலோவியம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



64

9

பேரிளம் பெண்ணாய் வாழும்
நாட்களை எண்ணி எண்ணிச்
சோருவாள் கிழவி; பேரன்
சொள்ளொழு வாயைக் காட்டி,
நேரிலா முதுகு காட்டி,
கைதட்டிச் சிரிப்பான்; நீண்ட
கூரம்பு பாய்ந்தாற் போலக்
கிழவியும் துடிப்பாள் அந்தோ !

10


ருக்கிய நெய்யை வெண்ணெய்
உருண்டையாய் ஆக்கல் உண்டோ ?
சுருங்கியே வீழ்ந்த பூவில்
மதுமீண்டும் துளிர்ப்ப துண்டோ ?
வருவது முண்டோ சென்ற
வாணாட்கள் ? நெஞ்சில் துன்பம்
பெருகிடும் எண்ண, பேச
எனச்சொல்லித் தேற்றாய் தம்பி !

---: :---

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழிலோவியம்.pdf/65&oldid=1301706" இலிருந்து மீள்விக்கப்பட்டது