பக்கம்:எழிலோவியம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்லறை

1

கரத்தின் இரைச்சல் கேட்டு
நலிவுற்றேன்; மனத்தை மாற்ற
நகரத்தைக் கடந்து தெற்கே
நடந்தனன்; இருண்ட தோப்பில்
புகுந்தொரு பாட்டை கண்டேன்;
கால்விட்ட வழியே போனேன்;
அகத்தெழு துன்பம் மாற்றும்
கல்லறை கண்டேன் அங்கே !

2



திலிடை இறந்த ஒவ்வோர்
மக்களின் நிலைமைக் கேற்பப்
புதைகுழி இருக்கக் கண்டேன்;
புழுங்கினேன்! மேலுங் கீழும்
இதிலுமா ? முடக்கி வாழ்வோர்
இல்லையேல், மக்கள் யாரும்
புதியவோர் இணைப்பில் என்றும்
புலிப்போத்தாய் வாழ்ந்தி டாரோ ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழிலோவியம்.pdf/70&oldid=1299734" இலிருந்து மீள்விக்கப்பட்டது