உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எழில் விருத்தம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எழில் விருத்தம்

21

கவிதை பாடத் துடிக்கும் கவின்மிகு பாவலர் கட்குச் சிறந்த ஊன்று கோலாகும்.

இந்நூல் புலவர் வகுப்பிற்குப் பாடநூலாக வைக்கத்தக்கதாகும்.

புதுமைக் கவிஞர் வாணிதாசனாரின் புதுமைப் படைப்பாக வெளிவரும் இந்நூலினைத் தமிழ் கூறும் நல்லுலகத்து மக்கள் அனைவர்க்கும் படைக்கும் வாய்ப்பைப் பெற்றமைக்கு மகிழ்கிறோம். புதுமைக் கவிஞர்க்கும், அணிந்துரை நல்கிய சென்னைப் பல்கலைக்கழகத் திருக்குறள் ஆராய்ச்சி விரிவுரையாளர், உயர்திரு. க.த. திருநாவுக்கரசு அவர்கட்கும் உங்கட்கும் வணக்கம்! நன்றி!


பதிப்பகத்தார்

+++++