பக்கம்:எழில் விருத்தம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எழில் விருத்தம்

33

வீரமென்ற வெறியேற்றி
     விரியுலக மக்களிலே
            வெகுபேர் தம்மை
ஈரமென்ற சொல்லுக்கே
      இடமின்றி எதிர்ப்போரை
             என்றும் வீழ்த்தும்
காரமென்ற சொல்லுக்கே
      வெற்றியென்று கதையளந்து
              கட்டி வாழ்ந்த
துரமுள்ள மலைக்கோட்டை
      இன்றோபாழ்! தாயகத்தின்
              துக்கச் செய்தி !....................................... 4

உழைப்பளித்த விளைவினிலே
      ஆறிலொன்றை உறுபொருளாய்
              உற்றான் மன்னன்
பிழைப்பளித்துப் படைதேக்கி
      நாடேய்த்த பெருமன்னர்
              பெருங்கற் கோட்டை
தழைப்பளித்து வாழ்ந்ததில்லை;
      தனிமனிதன் நல்வாழ்வு
              சரியும் என்றே
அழைப்பளித்தே பாழடைந்த
      கோட்டைமதில் அறிவுறுத்தும்
              அணுகு வோர்க்கே !............................. 5