பக்கம்:எழில் விருத்தம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எழில் விருத்தம்

45

6. சோலை

சோலைப் புதுப்பெண்ணைக் காணத்
    தூரத்து மாமலை விட்டே
மாலைக் கதிரொளி மங்க
    வந்தது மாமணத் தென்றல்
காலை உயர்த்தியே வானக்
    கார்முகில் கண்டாடும் தோகைக்
கோலத்தை எள்ளி நகைத்தே
    குழலிசை மீட்டின தும்பி !............................... 1

மாவிலை ஒத்ததோர் கிள்ளை
    வான வெளியினில் கத்தத்
தாவிப் பறந்தோடித் தத்தை
    சாரல் மலைசுற்றி மீளும் !
காவிற் கழுகுசெய் பெண்கள்
    கண்ணகை காட்டிடு பூக்கள் !
ஆவி பறித்திடக் கண்டேன்;
    அடடா அழகேபூஞ் சோலை !......................... 2