பக்கம்:எழில் விருத்தம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எழில் விருத்தம்

5

சென்னைப் பல்கலைக் கழகத் திருக்குறள்

ஆராய்ச்சி விரிவுரையாளர்,

திரு. க.த. திருநாவுக்கரசு M.A. (தமிழ்).

M.A.,(வரலாறு), M.Litt., மொழியியல் (Dip).,

அவர்கள் அளித்த

அணிந்துரை

தமிழகத்தின் மறுமலர்ச்சிக் கவிஞர்களுள் முதிர்ந்த அறிவும், கனிந்த அனுபவமும் பெற்று விளங்குபவர் கவிஞர் திரு. வாணிதாசன். அவர் பாரதிதாசன் காட்டிய புதிய வழியில் கற்றாரும் மற்றாரும், துடிக்கும் இளைஞர்களும் தொண்டு கிழவர்களும், நடிகர்களும் நாடாளும் நாவலர்களும் படித்து இன்புறத்தக்க எழில் மிக்க கவிதைகளை இனிய தமிழில் ஏற்றமுறப் பாடி வருகிறார் பன்னெடுங்காலமாக.

அவருடைய பாடல்களில் பைந்தமிழின் பசுமையையும், செந்தமிழின் செழுமையையும், தென் தமிழின் தெவிட்டாத தே னினிப்பையும், தண்டமிழின் தண்மையையும், கன்னித் தமிழின் கணியாத இளமையையும், புதுமைத் தமிழின் புதுப் பொலிவையும் தமிழ் கூறும் நல்லுலகம் கண்டு, வியந்து போற்றி வருகிறது.