பக்கம்:எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

ஆரம்பிப்பது என்ற குழப்பம் அநேகரை தயங்கச் செய்கிறது. பலர் துணிந்து எழுத ஆரம்பிக்கிறார்கள். பத்திரிகைகளில் படிக்கிற கவிதைகளைப் போலவும், கதைகளைப் பின்பற்றியும் தங்களுக்குத் தோன்றியதை எழுதுகிறார்கள்.

சிலர் தாங்கள் எழுதியவற்றை தங்கள் நண்பர்களிடம் வாசித்துக் காட்டுகிறார்கள். சிலர், மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்ற கூச்சத்துடன், யாரிடமும் காட்டாமலே வைத்துக் கொள்கிறார்கள். பலர் பத்திரிகைகளுக்கு அனுப்புகிறார்கள். எப்பவாவது, ஏதாவது, அச்சில் வந்து விட்டால், அவர்கள் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறார்கள். மேலும் உற்சாகத்துடன் எழுத்தில் ஈடுபடுகிறார்கள்.

இப்படி எழுதும் ஆர்வம் உடையவர்கள் சிலர் சேர்ந்து ‘கையெழுத்துப் பத்திரிகை’ நடத்துகிறார்கள்.

தமிழ் நாட்டில், கையெழுத்துப் பத்திரிகைகள் வெகு அதிகமாகவே இருக்கின்றன. சில நகரங்களில் இருபது, முப்பது என்று கூட இவை உருவாகின்றன. சில வட்டாரங்களில் கையெழுத்துப் பத்திரிகையாளர் சங்கம் கூட செயல்படுகிறது.

கையெழுத்துப் பத்திரிகைகளில் — மிகப் பல — ஜனரஞ்சகமான – வணிக நோக்குப் பத்திரிகைகளின் போக்குகளையே பின்பற்றினாலும் கூட, இத்தகைய முயற்சிகள் இளைஞர்களுக்கு இருக்கிற எழுத்து ஆர்வத்தையும், உற்சாகத்தையும், உழைப்பு ஊக்கத்தையும் நன்கு புலப்படுத்துகிற வெளிப்பாடுகளாக விளங்குகின்றன.

அநேகம் முயற்சிகள் அமைப்பில், எழுத்தில், சித்திர வேலைகளில், வர்ண விஸ்தாரங்களில்