பக்கம்:கடல் முத்து.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞான் ஒரு இந்தியணை ! § 9 மேலும் தொடர்ந்தது; தொடர்கிறது. பாதங்கள் கெஞ் சின; கொஞ்சின. பாவம், உமையவள்!... முன் ஒரு காலத்திலே, ஒற்றைக் கால் தவம் செய்தாளாமே?-அன்னையின் கால்கள் எப்படி எப்படியெல்லாம் வலித்திருக்கும்? அவன் தவித்தான்; பாசத் தவிப்பாக இருக்கலாம்: பாசத்தின் தவிப்பாகவே இருக்க வேண்டும்! பட்டணத்தில் சாஸ்திரி நகரில் பெண்டு-பிள்ளைகள்! எல்லாம் நண்டும், சுண்டும்!-மஹேஸ்வரனே, நீயும் பிள்ளைக் குட்டிக்காரன் தான்; பாசம் படுகிற பாடு உனக்கும் தெரியத்தான் வேனும்! அதனலேதான், உங்கிட்டே ஒரு சின்ன யாசகத்தை, ரொம் பச் சின்னதான ஒரு பிச்சையைக் கேட்கணும்னு இப்ப என் புத்திக்குத் தோணுது. என்னேட உசிரை இன்னும் ஒரு ஆறேழு வருஷத்துக்காச்சும் கட்டிக் காப்பாற்றி என் கையிலே ஒப்படைச்சிடுவியா, அப்பனே-அம்மையப்பனே? உன் பெண்களுக்குக் கல்யாணம்-காட்சி நடக்கவேணுமே!’அவனுக்கு மட்டுமல்லாமல் அவனுடைய கண்களுக்கும் அழத் தெரிகிறது!...வெள்ளம்.!... காலம் ஒடுகிறது. ரயிலும் ஒடுகிறது. கொட்டாவி பீறிடுகிறது. இப்போது நெஞ்சும் வலிக்கத் தொடங்கவே, ஆற்ருமை மேலிட்டது. பாதங்களே மாற்றிப் போட்டு நிற்கக்கூட முடிய வில்லையே? இந்நேரம் அரசாங்கத்துச் செலவிலே முதல் வகுப்பிலே ஜாம்ஜாம்னு பிரயாணம் செய்ய வேண்டியவன், இப்ப எப்படியெல்லாம் பிராண அவஸ்தைப்பட வேண் டியதாயிடுச்சு! கொச்சியிலிருந்து நேற்றைக்குத் தகவல் வந்திருந்தா, ப்யூன் உதவிகொண்டு டிக்கட் ரிசர்வேஷன் கிடைச்சிருக்குமே? அரசு முறையிலே மனிதர்கள் இயந்திரமாக அலுவல் பார்த்தாலும், வயது ஐம்பத்தெட்டு முடிந்துவிட் டால், உடனே பதவி ஓய்வு கொடுத்துவிடுவார்கள்! அவ னுக்கு இப்போது சிரிப்புச் சிரிப்பாக வந்தது. நாளை மறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/108&oldid=764952" இலிருந்து மீள்விக்கப்பட்டது