பக்கம்:கடல் முத்து.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞான் ஒரு இந்தியனன! 103 மூச்!-அந்த வெறியனுக்குச் சொற்பமாவது பேடி’ உண்டாக வேண்டாமோ? . . . பேடி!-அவன் ஆத்திரப் பட் டான். சுத்தத் தள்ளிப்பொளி!" அழகான தாயின் பூங்கரங்கள், அவளுடைய கச்சையின் பூவிலங்காக அமைந்த அடி முடிச்சை அத்தனை துக்கக் கலக்கத்திலும் ஞாபகமாக இறுக்கிக்கொள்வதில் முனைந்தன: கண்கள் இன்னமும் விழித்துக்கொள்ளவில்லை. பிள்ளையைப் படுக்கை ஒண்டலில் மாற்றிக் கிடத்திவிட்டு, அவளும் இப் போது மாறிக் கிடக்க எத்தனம் செய்தாள். முண்டு சீர் அடைந்து, சீர் பெற்றது. கஞ்ச மலர்ப்பாதங்கள் சேலைக் கரையில் ஒளிந்துகொண்டன. ஒ. ...! எவ்வளவு நாணயமான அழகோடு அவள் தரிசனம் தருகிருள்...அந்த அழகை நிதர்சனமான அழகென்றும் சொல்லவேண்டும்! அவன் எண்ணமிட்டான். குழற்கற்றை யில் மூன்ரும்பிறையாகப் பூத்து மணம் பரப்பிய மல்லிகைப் பூச்சரம் எத்துணை கம்பீரமான தருமத்தோடும், சத்தியத் தோடும் அவளுடைய மாண்புமிக்க அழகைப் பிரகடனப் படுத்திக் கொண்டிருக்கிறது! தாலிப்பொட்டின் புனித நிறச் சரடு பின்கழுத்தின் பூஞ்சை மயிர்த்தொகுதியில் வனவாசம் செய்திருக்கலாம். * அவன் அந்தக் காமவெறியனை மறுபடி நோக்கினன். ஆனல், அந்தக் காமுகனே, இன்னமும்கூட அந்தப் பேரழகுச் சிங்காரியையே ரசித்துக் கொண்டிருந்தான்...! கைந்நொடிப் பொழுது கழிந்தது. என்ன அநியாயம். . . ! அந்தக் காவாலிப்பயல் அவள் காலடியில் குந்தி, சில வினாடிகளுக்கெல்லாம் அவளுக்குப் பக்கத்தில் சாய்ந்து விட்டான்! அவனது ஆத்திரம் வளர்ந்தது... யார் இந்தப் பொறுக்கி...? இவன் அந்தப் பெண்னேட "பர்த்தாவு'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/112&oldid=764957" இலிருந்து மீள்விக்கப்பட்டது