பக்கம்:கடல் முத்து.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லைச் சக்தி 'விந்தையான விமரிசனம். ஆமாம், உன் சிந்தை தடு மாருமல் பார்த்துக்கொள். உண்மையிலேயே நீ என்னைவிட ஆடலில் சிறந்தவளென்ருல், நீ சற்றுமுன் பெண்ணுள் ஆளுகிச் சூளுரைத்தாயே, அந்தச் சூளுக்கு-சவாலுக்குசபதத்துக்கு வெற்றி சொல்ல வேண்டுமென்ருல், நீ அந்தப் பார்வதியாகிவிடக்கூடாது. நினைவில் கிறுக்கி வைத்துக் கொள். உன் பேதை மனம் கிறுக்காகிவிடப் போகிறது. உஷார்!-சிவபிரானல் சிந்தையொடுக்கப்பட்ட சக்தியாகி, தில்லையில்போய் எல்லைக்கல் பதித்துவிடக்கூடாது!... நடன உலகம் அப்பால் உன் பெயருக்குப் பாரதம் பாடிவிடும்...! அதுமட்டுமா? பரணியும் புனைந்துவிடுவார்கள். நிஜமாகவே உன் விமரிசனத்திலே விந்தை என்ற சொல்லை அடைமொழி யாக்கிவிடாதே!...போட்டியிடப் போகிறவனே தன் எதிர்க் கட்சிக்காரிக்குப் பாடம் படித்துக்கொடுக்கிருனேயென்று எண்ணி அப்படி உன் மீன் விழிகள் துடிக்கின்றனவோ?சொல், உன் கண்களிடம்; நான் நாளை உன்னைச் சந்திக்கி றேன்-நடன அரங்கிலே! அல்ல, அல்ல... எல்லையிலாப் பெருவெளிக்கு எல்லை கிழித்துக் கிடக்கும் மயானத்திலே, சக்தியின் அகந்தை ஒடுக்கக் கால் மாறிக் குனிந்து குழை நக்கிய பிஞ்ஞகளுக நாளை உன்னைச் சந்திக்கின்றேன். . . ஹ ஹ் ஹா!... , ஹ ஹ் ஹா. . . ' "மறந்துவிடாதீர்கள், உங்கள் சபதத்தை-சூளுரையைவாதத்தை!...நடன ரஸிகர்கள் தீர்ப்புச் சொல்லட்டும்: நாளை விடியட்டும். துரைராஜன் நடனத்தில் சிறந்தவரா? இல்லை, பார்வதி சிறந்தவளா?-அதோ, கைலங்கிரியிலே, வெள்ளைப் பனிமலை மீதிலே-ஏன், அந்த அலகிலா விளை யாட்டுடையானின் முகத்தில்கூட இந்தக் கேள்விகளுக்குப் பதில் பிரதிபலிக்கிறதே?...என் மாதா பராசக்திகூடச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/116&oldid=764961" இலிருந்து மீள்விக்கப்பட்டது